Athigaram 2
Kural- 0015
அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
Kural in English Transliteration:
Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange
Etuppadhooum Ellaam Mazhai.
Couplet Explanation:
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune
மு.வ உரை:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.
கலைஞர் விளக்கம்:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும்,
பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும்
மழையே ஆகும்.
Rev. Dr. G.U.Pope Translations:
‘Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;
As, in the happy days before, it bids the ruined rise.
Yogi Shuddhananda Translations:
Destruction it may sometimes pour,
But only rain can life restore.
Easy reading Thirukurral by Parimelazhagar :
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
யெடுப்பதூஉ மெல்லா மழை
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
தொடரமைப்பு:
கெடுப்பதுஉம் கெட்டார்க்கு சார்வு ஆய் மற்று ஆங்கே எடுப்பதுஉம் எல்லாம் மழை.
- பரிமேலழகர் உரை:
- (இதன் பொருள்) கெடுப்பதூஉம் = (பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று) கெடுப்பதூஉம்;
- கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் = (அவ்வாறு) கெட்டார்க்குத் துணையாய்(ப் பெய்து) முன் கெடுத்தாற்போல எடுப்பதூஉம்;
- எல்லாம் மழை = இவை எல்லாம் (வல்லது) மழை.
- பரிமேலழகர் உரை விளக்கம்:
- `மற்று` வினைமாற்றின்கண் வந்தது.
- `ஆங்கு` என்பது, மறுதலைத் தொழில் உவமத்தின்கண் வந்த உவமச்சொல்.
- கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், `கெட்டார்க்கு` என்றார்.
- `எல்லாம்` என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளாற் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி.
- ‘வல்லது’ என்பது, அவாய்நிலை‡யான் வந்தது.
- மழையினது ஆற்றல் கூறியவாறு.
Leave a Comment
You must be logged in to post a comment.