Tamil Language Thirukkural

Thirukkural -0014

Written by Thamizh Nadu .com

Athigaram 2

Kural- 0014

அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

Kural in English Transliteration:

Erin Uzhaaar Uzhavar Puyalennum
Vaari Valangundrik Kaal.

Couplet Explanation:

If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

மு.வ உரை:

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்

கலைஞர் விளக்கம்:

மழை  என்னும்  வருவாய்  வளம்  குன்றிவிட்டால், உழவுத்  தொழில்
குன்றிவிடும்.

Rev. Dr. G.U.Pope Translations:

If clouds their wealth on waters fail on earth to pour,
The ploughers plough with oxen’s sturdy team no more.

Yogi Shuddhananda Translations:

Unless the fruitful shower descend,
The ploughman’s sacred toil must end.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

    ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்

ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்

வாரி வளம் குன்றிக்கால்.

தொடரமைப்பு:உழவர் ஏரின் உழாஅர்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால்.

பரிமேலழகர் உரை:
உழவர் ஏரின் உழாஅர் = உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்;
புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் = மழை என்னும் வருவாய் (தன்) பயன் குன்றின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
‘குன்றியக்கால்’ என்பது, குறைந்து நின்றது.
உணவின்மைக்குக் காரணம் கூறியவாறு.

About the author

Thamizh Nadu .com

Leave a Comment