Tamil Language Thirukkural

Thirukkural -0013

Written by Thamizh Nadu .com

Athigaram 2

Kural- 0013

அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி.

Kural in English Transliteration:

Vinindru Poippin Virineer Viyanulakaththu
Ulnindru Utatrum Pasi.

Couplet Explanation:

If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

மு.வ உரை:

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை:

உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

கலைஞர் விளக்கம்:

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர்   பொய்த்துவிட்டால் பசியின்
கொடுமை வாட்டி வதைக்கும்.

Rev. Dr. G.U.Pope Translations:

If clouds. The promised rain, deceive, and in the sky remain,
Famine, sore torment, stalks o’er earth’s vast ocean-girdled plain.

Yogi Shuddhananda Translations:

Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்

துண்ணின் றுடற்றும் பசி.

விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து

உள் நின்று உடற்றும் பசி.

தொடரமைப்பு: விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்துள் நின்று உடற்றும் பசி

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) விண் இன்று பொய்ப்பின் = மழை வேண்டுங் காலத்துப் பெய்யாது பொய்க்குமாயின்;
விரிநீர் வியன் உலகத்துள் = கடலாற் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்;
நின்று உடற்றும் பசி = நிலைபெற்று (உயிர்களை) வருத்தும் பசி.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
கடலுடைத்தாயினும் அதனாற் பயனி்ல்லை என்பார், ‘விரிநீர் வியனுலகத்து’ என்றார்; உணவின்மையின், பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.

About the author

Thamizh Nadu .com

Leave a Comment