Tamil Language Thirukkural

Thirukkural -0012

Written by Thamizh Nadu .com

Athigaram 2

Kural- 0012

அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம்  மழை.

Kural in English Transliteration:

Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth
Thuppaaya Thooum Mazhai.

Couplet Explanation:

Rain produces good food, and is itself food.

மு.வ உரை:.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

கலைஞர் விளக்கம்:

யாருக்கு   உணவுப்      பொருள்களை    விளைவித்துத்தர   மழை
பயன்படுகிறதோ,   அவர்களுக்கே   அந்த  மழை   அவர்கள் அருந்தும்
உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.

Rev. Dr. G.U.Pope Translations:

The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.

Yogi Shuddhananda Translations:

The rain begets the food we eat
And forms a food and drink concrete.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉமழை.   

                                           துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித்  துப்பார்க்குத்

                                        துப்பு ஆயதூஉம் மழை.

தொடரமைப்பு:துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்கு துப்பு ஆயதுஉம் மழை.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி = உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி;
துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை = (அவற்றை) உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
தானும் உணவாதலாவது தண்ணீராய் உண்ணப்படுதல்.
சிறப்புடைய உயர்திணைமேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.

About the author

Thamizh Nadu .com

Leave a Comment