Thirukkural -0011

Athigaram 2

Kural- 0011

அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

Kural in English Transliteration:

Vaannindru Ulakam Vazhangi Varudhalaal
Thaanamizhdham Endrunarar Paatru.

Couplet Explanation:

By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.

மு.வ உரை:

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

கலைஞர் விளக்கம்:

உலகத்தை  வாழ   வைப்பது  மழையாக  அமைந்திருப்பதால் அதுவே
அமிழ்தம் எனப்படுகிறது.

Rev. Dr. G.U.Pope Translations:

The World its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.

Yogi Shuddhananda Translations:

The genial rain ambrosia call:
The world but lasts while rain shall fall.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

வானின் றுலகம் வழங்கி வருதலாற்      வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
றானமிழ்த மென்றுணரற் பாற்று.             தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று.

தொடரமைப்பு:

இதன் பொருள்:

வான் நின்று உலகம் வழங்கி வருதலால் = மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்;
தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று = அம்மழைதான் (உலகத்திற்கு) அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடையது.

உரை விளக்கம்:

‘நிற்ப’ என்பது, ‘நின்று’ எனத்திரிந்து நின்றது.
‘உலகம்’ என்றது, ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது, பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல்.
அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், ‘உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை அமிழ்தம் என்று உணர்க’ என்றார்.

Leave a comment