Chapter [ Adhigaram ] – 1 – [ அதிகாரம் ] – 1
Kural- 0010
Kadavul Vaazhththu – The Praise of God கடவுள் வாழ்த்து
அதிகாரம் Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Kadavul Vaazhththu
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
Kural in English Transliteration:
Piravip Perungatal Neendhuvar Neendhaar
Iraivan Atiseraa Thaar.
Couplet Explanation:
None can swim the great sea of births but those who are united to the feet of God.
மு.வ உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
கலைஞர் விளக்கம்:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர்,
தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த
முடியாமல் தவிக்க நேரிடும்.
Rev. Dr. G.U.Pope Translations:
They swim the sea of births, the ‘Monarch’s’ foot who gain;
None other’s reach the shore of being’s mighty main.
Yogi Shuddhananda Translations:
The sea of births they alone swim
Who clench His feet and cleave to Him.
Easy reading Thirukurral by Parimelazhagar :
பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார்:
பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.
தொடரமைப்பு:இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவி பெரு கடல் நீந்துவர், சேராதார் நீந்தார்.
- பரிமேலழகர் உரை:
- (இதன்பொருள்) இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் = இறைவன் அடி என்னும் புணையைச் (சேர்ந்தார்), பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்;
- சேராதார் நீந்தார் = (அதனைச்) சேராதார், நீந்தமாட்டாராய் (அதனுள்) அழுந்துவர்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்:
- காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், ‘பிறவிப்பெருங்கடல்’ என்றார். ‘சேர்ந்தார்’ என்பது சொல்லெச்சம்¶.
- உலகியல்பை நினையாது, இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவியறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன.
Leave a Comment
You must be logged in to post a comment.