Tamil Language Thirukkural

Thirukkural -0007

Written by Thamizh Nadu .com

Athigaram 1

Kural- 0007

Chapter [ Adhigaram ] – 1 – [  அதிகாரம் ] – 1

Kadavul Vaazhththu – The Praise of God  கடவுள் வாழ்த்து

அதிகாரம் Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Kadavul Vaazhththu
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

Kural in English Transliteration:

Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal

Manakkavalai Maatral Aridhu .

Couplet Explanation:

Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

மு.வ உரை:

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

சாலமன் பாப்பையா உரை:

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

கலைஞர் விளக்கம்:

ஒப்பாரும்   மிக்காருமில்லாதவனுடைய  அடியொற்றி  நடப்பவர்களைத்
தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

Rev. Dr. G.U.Pope Translations:

Unless His foot, ‘to Whom none can compare,‘ men gain,
‘Tis hard for mind to find relief from anxious pain.

Yogi Shuddhananda Translations:

His feet, whose likeness none can find,
Alone can ease the anxious mind.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான்
மனக்கவலை மாற்ற லரிது.
  தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
  மனம் கவலை மாற்றல் அரிது. 

தொடரமைப்பு:தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனம் கவலை மாற்றல் அரிது.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் = (ஒருவாற்றானும்) தனக்கு நிகர்இல்லாதவனது, தாளைச் சேர்ந்தார்க்கல்லது;
மனம் கவலை மாற்றல் அரிது = மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
“உறற்பால- தீண்டா விடுத லரிது”# (நாலடியார்,109) என்றாற் போல, ஈண்டு ‘அருமை’ இன்மைமேல்
நின்றது.
தாள் சேராதார், பிறவிக்கு ஏதுவாய காம வெகுளி மயக்கங்களை மாற்ற மாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.

About the author

Thamizh Nadu .com

Leave a Comment