Athigaram 1
Kural- 0008
Chapter [ Adhigaram ] – 1 – [ அதிகாரம் ] – 1
Kadavul Vaazhththu – The Praise of God கடவுள் வாழ்த்து
அதிகாரம் Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Kadavul Vaazhththu
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
Kural in English Transliteration:
Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal
Piravaazhi Neendhal Aridhu.
Couplet Explanation:
None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.
மு.வ உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.
கலைஞர் விளக்கம்:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,அறக்கடலாகவே
விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி,
மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான
காரியமல்ல.
Rev. Dr. G.U.Pope Translations:
Unless His feet, the Sea of Good, the Fair and Bountilful,’men gain,
‘Tis hard the further bank of being’s changeful sea to attain.
Yogi Shuddhananda Translations:
Who swims the sea of vice is he
Who clasps the feet of Virtue’s sea.
Easy reading Thirukurral by Parimelazhagar :
அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது
அறம் ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது.
தொடரமைப்பு:
அறம் ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் அரிது.
- பரிமேலழகர் உரை:
- (இதன் பொருள்) அறம் ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் = அறக் கடலாகிய அந்தணனது, தாளாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது;
- பிற ஆழி நீந்தல் அரிது = (அதனிற்) பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது.
- பரிமேலழகர் உரைவிளக்கம்:
-
அறம், பொருள், இன்பமென உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும் இன்பமும் ‘பிற’வெனப்பட்டன.
-
பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்குவடிவாக உடையன் ஆகலின், ‘அறவாழி அந்தணன்’ என்றார். ‘அறவாழி’ என்பதைத் தருமசக்கரமாக்கி, அதனையுடைய அந்தணன் என்று உரைப்பாரும் உளர்.
-
அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், ‘நீந்தலரிது’ என்றார். இஃது ஏகதேச உருவகம்
Leave a Comment
You must be logged in to post a comment.