Tamil Language Thirukkural

Thirukkural -0006

Written by Thamizh Nadu .com

Athigaram 1

Kural- 0006

Chapter [ Adhigaram ] – 1 – [  அதிகாரம் ] – 1

Kadavul Vaazhththu – The Praise of God  கடவுள் வாழ்த்து

அதிகாரம் Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Kadavul Vaazhththu
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

Kural in English Transliteration:

Porivaayil Aindhaviththaan Poidheer Ozhukka

Nerinindraar Neetuvaazh Vaar .

Couplet Explanation:

Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.

மு.வ உரை:

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

சாலமன் பாப்பையா உரை:

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.

கலைஞர் விளக்கம்:

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்

Rev. Dr. G.U.Pope Translations:

Long live they blest, who’ve stood in path from falsehood freed;
His, ‘Who quenched lusts that from the sense-gates five proceed.

Yogi Shuddhananda Translations:

They prosper long who walk His way
Who has the senses signed away.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்கம்

                            நெறி நின்றார் நீடு வாழ்வார்.

 

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்.) பொறி வாயில் ஐந்து அவித்தான் = (மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும்) பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது;
பொய் தீர் ஒழுக்கம் நெறி நின்றார் = மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார்;
நீடு வாழ்வார் = (பிறப்பின்றி) எக்காலத்தும் (ஒருதன்மையராய்) வாழ்வார்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
புலன்கள் ஐந்தாகலான், அவற்றின்கட் செல்கின்ற அவாவும் ஐந்தாயிற்று.
ஒழுக்கநெறி ஐந்தவித்தானாற் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு – செய்யுட்கிழமைக்கண் வந்தது, “கபிலரது பாட்டு” என்பது போல.
இவை நான்கு பாட்டானும், இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன்நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது.

About the author

Thamizh Nadu .com

Leave a Comment