Athigaram 1
Kural- 0005
Chapter [ Adhigaram ] – 1 – [ அதிகாரம் ] – 1
Kadavul Vaazhththu – The Praise of God கடவுள் வாழ்த்து
அதிகாரம் Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Kadavul Vaazhththu
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
இருள் சேர் இரு வினையும் சேரா, இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு.
Kural in English Transliteration:
Irulser Iruvinaiyum Seraa Iraivan
Porulser Pukazhpurindhaar Maattu .
Couplet Explanation:
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.
மு.வ உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
கலைஞர் விளக்கம்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்
Rev. Dr. G.U.Pope Translations:
The men, ‘who on the ”King’s’ true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.
Yogi Shuddhananda Translations:
God’s praise who tell, are free from right
And wrong, the twins of dreaming night.
Easy reading Thirukurral by Parimelazhagar :
- இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
- பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
- பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.
தொடரமைப்பு: இருள் சேர் இரு வினையும் சேரா, இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.
- பரிமேலழகர் உரை:
- (இதன்பொருள்.) இருள் சேர் இருவினையும் சேரா = மயக்கத்தைப் பற்றிவரும் (நல்வினை தீவினை என்னும்) இரண்டுவினையும் உளவாகா;
- இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு = இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினார் இடத்து.
- பரிமேலழகர் உரை விளக்கம்:
- இன்னதன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் ‘அவிச்சை’யை, இருள் என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையுஞ் சேரா’ என்றும் கூறினார்.
- இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே ‘பொருள்சேர் புகழ்’ எனப்பட்டது.
- புரிதல்- எப்பொழுதும் சொல்லுதல்.
Leave a Comment
You must be logged in to post a comment.