Tamil Language Thirukkural

Thirukkural -0004

Written by Thamizh Nadu .com

Athigaram 1

Kural- 0004

Chapter [ Adhigaram ] – 1 – [  அதிகாரம் ] – 1

Kadavul Vaazhththu – The Praise of God  கடவுள் வாழ்த்து

அதிகாரம் Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Kadavul Vaazhththu
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

Kural in English Transliteration:

Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku

Yaantum Itumpai Ila.

Couplet Explanation:

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

மு.வ உரை:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

கலைஞர் விளக்கம்:

விருப்பு  வெறுப்பற்றுத்  தன்னலமின்றித்   திகழ்கின்றவரைப் பின்பற்றி
நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

Rev. Dr. G.U.Pope Translations:

His foot, ‘Whom want affects not, irks not grief’, who gain
Shall not, through every time, of any woes complain.

Yogi Shuddhananda Translations:

Who hold His feet who likes nor loathes
Are free from woes of human births.

Easy as reading Thirukurral  by Parimelazhagar :

வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

தொடரமைப்பு: வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

இதன்பொருள்
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு= (ஒரு பொருளையும்) விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு;
யாண்டும் இடும்பை இல= எக்காலத்தும் (பிறவித்) துன்பங்கள் உளவாகா.
விளக்கம்
பிறவித்துன்பங்களாவன: தன்னைப்பற்றி வருவனவும், பிற உயிர்களைப்பற்றி வருவனவும், தெய்வத்தைப்பற்றி வருவனவும் என மூவகையான்1 வருந்துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும்2 இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.

About the author

Thamizh Nadu .com

Leave a Comment