Adhigaram-1
Kural-0003
Chapter [ Adhigaram ] – 1 – [ அதிகாரம் ] – 1
Kadavul Vaazhththu – The Praise of God கடவுள் வாழ்த்து
அதிகாரம் Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Kadavul Vaazhththu
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
Kural in English Transliteration:
Malarmisai Ekinaan Maanati Serndhaar
Nilamisai Neetuvaazh Vaar.
Couplet Explanation:
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.
மு.வ உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப
சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
கலைஞர் விளக்கம்:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின்
புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
Rev. Dr. G.U.Pope Translations:
His Feet, ‘who o’er the full- blown flower hath past,’ who gain
In bliss long time shall dwell above this earthly plain.
Yogi Shuddhananda Translations:
Long they live on earth who gain
The feet of God in florid brain.
Easy as reading Thirukurral by Parimelazhagar :
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலம் மிசை நீடு வாழ்வார்.
தொடரமைப்பு: மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் மிசை நிலம் நீடு வாழ்வார்
- பரிமேலழகர் உரை:
- (இதன் பொருள்:) மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் = மலரின்கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்;
- மிசை நிலம் நீடு வாழ்வார் = (எல்லா உலகிற்கும்) மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்.
- பரிமேலழகர் உரை விளக்கம்:
- அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின், ‘ஏகினான்’ என இறந்த காலத்தாற் கூறினார்; என்னை?
- “வாராக் காலத்து நிகழுங்காலத்து
- மோராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
- யிறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
- விரைந்த பொருள வென்மனார் புலவர்”1 என்பது ஓத்தாகலின்.
- இதனைப் “பூமேனடந்தான்” என்பதோர் பெயர்பற்றிப் பிறிதொரு கடவுட்கு ஏற்றுவாரும் உளர்.
- சேர்தல்- இடைவிடாது நினைத்தல்.
Leave a Comment
You must be logged in to post a comment.