Chapter [ Adhigaram ] – 1 – [ அதிகாரம் ] – 1
Kadavul Vaazhththu – The Praise of God கடவுள் வாழ்த்து
அதிகாரம் Chapter/Adhigaram: கடவுள் வாழ்த்து/The Praise of God/Kadavul Vaazhththu
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
Kural in English Transliteration
Agara Mudhala Ezhuththellaam Aadhi
bhagavan Mudhatre Ulagu.
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world
Tamil Explanations by great scholars
மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
கலைஞர் விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
Rev. Dr. G.U.Pope Translations:
A, as its first of letters, every speech maintains;
The “Primal Deity” is first through all the world’s domains
Yogi Shuddhananda Translations:
‘A’ leads letters; the Ancient Lord
Leads and lords the entire world.
Easy as reading Thirukurral by Parimelazhagar :
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
- அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
- பகவன் முதற்றே உலகு.
தொடரமைப்பு: எழுத்து எல்லாம் அகர முதல, உலகு ஆதிபகவன் முதற்று.
இதன் பொருள்:
- எழுத்து எல்லாம் அகர முதல = எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன;
- உலகு ஆதி பகவன் முதற்று = அதுபோல உலகம் ஆதிபகவனாகிய1 முதலை உடைத்து.
பரிமேலழகர் உரை விளக்கம்:
- இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை2. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான்அன்றி நாதமாத்திரையாகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான்அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.
- தமிழ் எழுத்துக்கேயன்றி வடவெழுத்திற்கும் முதலாதல் நோக்கி, ‘எழுத்தெல்லாம்’ என்றார்.
- ‘ஆதிபகவன்’ என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன் முடிபு.
- ‘உலகு’ என்றது, ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறவேண்டுதலின், ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என உலகின்மேல் வைத்துக்கூறினார். கூறினாரேனும்,உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க.
- ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது.
- இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.
Leave a Comment
You must be logged in to post a comment.