குயில் மேலும் கூறுகிறது. என் நா தழுதழுக்கிறது. வார்த்தைகள் நடுங்குகின்றன. மனம் பதறுகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்டால், என் நெஞ்சத்தைப் புரிந்துக் கொள்வீர்கள் நீங்கள். என் நண்பரே, என் சிந்தனைக் காட்சி சிறிதும் புரியவில்லையா? காதலுக்காக கதறுகிறேன்.
கண்ணீர் விடுகிறேன். இல்லையேல் என் சாதலைக் காண தவிக்கிறேன் என்று குயில் கூற, துணுக்குற்றது கவிஞர் மனம்.நான் உனக்கு காதலனா? சின்னக் குயிலின் மதுர மொழியில் உள்ளம் கவர்ந்தவராய் உரைக்கப்பட்டதால் உள்ளமும், உயிரும் உருகி நிற்க பேச்சின்றி சிலையானார்.
குயில் கூறி கதறிய வார்த்தை, இவரைக் குழப்பியது. காதல் இல்லையேல் இறந்துவிடுவேன் என்று சொல்லும் சொல், உள்ள வீணையில் உட்கார்ந்து சோக கீதம் பாடியது.
குழம்பிய நிலையில், நம் கவிஞர் நின்றார். மயக்கமுற்று, திகைப்படைந்து நின்றேன் என்று கூறுகிறார்.
அவர்களின் தனிமையைக் கெடுக்க, அந்த நேரத்தில், எல்லா பறவைகளும் ஒன்றுகூடி, கிளைமேல் அமர்ந்து, ஒலியெழுப்பின.
காதல் குயில் பெருமூச்சி விட்டு மேலும் கூறியது, காதலு வழி கரடுமுரடானது என்று கேள்விப்பட்டுள்ளேன். ஒளி படைத்த என் கண்ணனே, துன்பக் கடலில் தத்தளிக்கும் நேரத்தில், என்னைக் காக்க ஒரு கப்பல் போல் நீவிர் வந்தீர். என் கவலை தீர, தங்களிடம் அளவளாவ விரும்பியவருக்குத் தடை வந்துவிட்டது. நான் தம் தனிமையைக் கெடுக்க. ஆனால் ஒரே ஒரு செய்தி, இன்றிலிருந்து நான்காம் நாள், மீண்டும் இங்கேயே நாம் சந்திப்போம். மறந்துவிடாதீர்கள் என் மன்னனே. என் சிந்தனை அனைத்தும் உங்களிடம் பறிகொடுத்துள்ளேன். மறவாமல் வந்துவிடுங்கள். வரவில்லையேல் எனக்கு மரணம் நிச்சயம். நான்காம் நாள் என்று அக்குயில் மீண்டும் நினைவூட்டியது.
காத்திருக்கும் நான்கு நாட்களும், நான்கு யுகங்களாகும் எனக்கு. இப்பொழுது சென்று வாருங்கள் என கூறிய அந்தக் குயில், பறந்து மறைந்துவிடுகிறது என பாட்டுடைத் தலைவர் இந்த பத்தியை முடிக்கிறார்.
The Koels love refrain,I pine for love or else for death,
Like the cooing of love
Played on the guitar of my heart and filled the spaces of my soul entire and thrilled
As soul enchanted there I stood,on the mangrove.
Rang wild again with song on every bough
For all the birds had now returned, Alas said the koel with a sigh they say,the course of love is rugged
You bright eyes in your prime came to me as a life boat floating in correct time.
For one fast drowning in a sea of grief
For my sweet enjoyment
I as it is but brief
Of your loving company,a hindrance sore
Had clouding spread,O lord that I adore
I beg you come again four mornings hence
O fail not,born high who had robbed me since my heart
If failed to return back I will die
Remember 4 days from now on,each day will lie full heavily on me as 4 yuga’s ten
O please do return,the loveliest of all men…
There are 4 yugas
Kruda Yugam 17,28,000 years
Thretha yugam 92,96,000 years
Thwapura yugam 8,64,000years
Kali yugam 4,32,000 years duration
Leave a Comment
You must be logged in to post a comment.