அந்த சோலைக் குயில் தன் சோகக் கதையை சொல்லத் தொடங்குகிறது. என் மானத்திற்கு ஏற்பட்ட சோதனையையும், துன்பத்தையும் பார்க்காமல் உண்மை முழுவதையும் சொல்லி விடுகிறேன். உயர் குலத்தோரே கேளுங்கள். நானும் பெண் என்பதால் நான் கூற இருப்பதை சிறிது மனமிறங்கி செவி மடுப்பீர்.
இந்த உலகில், உருவத்திலும் அறிவிலும் சிறிய வடிவிலான பறவையாக நான் பிறந்திருந்தாலும், இறைவன் அருளாலோ அல்லது தேவர்களின் கோபத்தினாலோ நான் அனைத்து உயிர்களின் மொழிகளையும் புரிந்துகொள்ளும் சக்தி பெற்றேன். மனிதர்களின் மனத்தில் ஓடும் எண்ணங்களையும் புரிந்துகொள்ளும் சக்தி கிடைத்தது.
காட்டில் பறக்கும் பறவைகளின் கலகலவென்ற மகிழ்ச்சியின் ஓசையிலும், மரங்களின் இலைகளை அசைத்து காற்று இசை பாடுவதிலும், ஓடும் நதியின் ஒலியிலும் ஆர்ப்பரித்து விழும் நதியின் ஆரவாரத்திலும், கடல் அலை எழுந்து கரையைத் தொட்டு ஓடும் ஓயாத ஒலியிலும் என் மனத்தை பறிகொடுத்தவள் நான்.
அதுமட்டுமல்ல, மனித குல பெண்கள், காதலாகி கசிந்துருகிப் பாடும் தேன் மழைப் பாட்டிசையிலும், ஏத்தம் இரைக்கையில் எழுந்து வரும் இசைப்பாட்டிலும், உறையில் நெல்லைப் போட்டு உலக்கையினால் மூச்சிறைக்கும் வேளையிலும் குக்கூ என்று கொஞ்சு மொழி தெறிக்கும் இராகத்திலும், வெற்றிலை போட சுண்ணாம்பு இடிக்கையில் தாள இலயத்துடன் வரும் பாட்டொலியிலும், வயல் வெளியில் பெண்கள் இசைக்கும் பல்வேறு கானத்திலும், பெண்கள் கூடி வட்டமிட்டு நின்று கும்மி பாடும் இன்னிசையிலும், புல்லாங்குழல், வீணை, இசைக்கருவிகள் மூலம் மனிதர்கள் விரலிலும் குரலிலும் இசைக்கும் பாட்டிலும், வீட்டிலும், வெளியிலும், நாட்டிலும், காட்டிலும் என எங்கெல்லாம் இசை என்னும் இன்ப ஒலி கேட்கின்றதோ, அதில் அந்த பாட்டில் என் நெஞ்சை பறிகொடுத்த பாவி நான் என்கிறது அந்தக் குயில்.
O high born,shedding shame and sorrowing
I will all truth lay bare.And thou,bear
With a maidens faults and me pardoned,On earth
A bird though born,with knowledge nothing worth,
By love of Devas or great heavens ire,
I know with ease the tongues of men entire
I am,O strange,their thoughts and dreams versed in
In the chirpy sounds
Of the songbirds’ calls
The music of the breeze
Blowing through the trees
The soothing gurgling tunes
Of gushing streams and tumbling falls
The eternal cadence
Of the waves of the blue seas,
The honey sweet melody
Of young women in love
The waterwheel movements
And songs matching their move
The giggle of the slender women
while pounding paddy
The lilt of the songs
of lime crushers in the quarry,
The energising ballads
Sung by farming women,
The beat of the kummi dancers
With the tinkle of their bangles
The grace in their moves
As they glide around in circles,
The magical flow of music
Played, strung or beat
In flute, veena or like,
Strike a chord very deep
Stir me from deep within,
Anytime anywhere, anyway,
I lose myself in all these
And get carried far, far, away.
முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
தொடர்புக்கு:dr.n.arul@gmail.com
Leave a Comment
You must be logged in to post a comment.