Athigaram 3
Kural- 0023
அதிகாரம்/Chapter/Adhigaram: நீத்தார் பெருமை/The Greatness of Ascetics/Neeththaar Perumai 3
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.
Kural in English Transliteration:
Irumai Vakaidherindhu Eentuaram Poontaar
Perumai Pirangitru Ulaku.
Couplet Explanation:
The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).
மு.வ உரை:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
சாலமன் பாப்பையா உரை:
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.
கலைஞர் உரை:
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக் குரியவர்களாவார்கள்.
Rev. Dr. G.U.Pope Translations:
Their greatness earth transcends, who, way of both worlds weighed,
In this world take their stand, in virtue’s robe arrayed.
Yogi Shuddhananda Translations:
No lustre can with theirs compare
Who know the right and virtue wear.
Easy reading Thirukurral by Parimelazhagar :
“இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.
- இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
- பெருமை பிறங்கிற்று உலகு.
- தொடரமைப்பு: இருமை வகை தெரிந்து, ஈண்டு அறம் பூண்டார் பெருமை, உலகு பிறங்கிற்று.
- பரிமேலழகர் உரை:
- (இதன் பொருள்) இருமை வகை தெரிந்து = (பிறப்பு வீடு என்னும்) இரண்டனது (துன்ப வின்பக்) கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து;
- ஈண்டு அறம் பூண்டார் பெருமை = (அப்பிறப்பு அறுத்தற்கு) இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே;
- உலகு பிறங்கிற்று = உலகின்கண் உயர்ந்தது.
- பரிமேலழகர் உரை விளக்கம்:
- “தெரிமாண் தமிழ்மும்மைத் தென்னம் பொருப்பன்”† என்புழிப் போல ‘இருமை’‡ என்பது, ஈண்டு எண்ணின்கண் நின்றது.
- பிரிநிலை ஏகாரம், விகாரத்தால் தொக்கது.
- இதனால், திகிரி உருட்டி உலகம் முழுதாண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது.
- இவை மூன்று பாட்டானும், நீத்தாரது பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.
Leave a Comment
You must be logged in to post a comment.