Tamil Language Thirukkural

Thirukkural -0022

Written by Thamizh Nadu .com

Athigaram 3

Kural- 0022

அதிகாரம்/Chapter/Adhigaram: நீத்தார் பெருமை/The Greatness of Ascetics/Neeththaar Perumai 3
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

Kural in English Transliteration:

Thurandhaar Perumai Thunaikkoorin Vaiyaththu
Irandhaarai Ennikkon Tatru.

Couplet Explanation:

To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.

மு.வ உரை:

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

கலைஞர் உரை:

உலகில்  இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா?
அதுபோலத்தான்  உண்மையாகவே   பற்றுகளைத்  துறந்த  உத்தமர்களின்
பெருமையையும் அளவிடவே முடியாது.

Rev. Dr. G.U.Pope Translations:

As counting those that from the earth have passed away,
‘Tis vain attempt the might of holy men to say.

Yogi Shuddhananda Translations:

To con ascetic glory here
Is to count the dead upon the sphere.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்

திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.

                                           துறந்தார் பெருமை துணைக் கூறின் வையத்து

                                          இறந்தாரை எண்ணிக் கொண்டற்று.

 

தொடரமைப்பு:
                            துறந்தார் பெருமை துணைக் கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டு அற்று.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) துறந்தார் பெருமை துணைக் கூறின் = (இருவகைப் பற்றினையும்) விட்டாரது பெருமையை இவ்வளவு என்று (எண்ணால்) கூறி அறியலுறின், (அளவுபடாமையான்);
வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று = இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி (இத்துணையர் என) அறியலு்ற்றாற் போலும்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
முடியாது என்பதாம். கொண்டால் என்னும் வினையெச்சம் (கொண்டு) எனத் திரிந்து நின்றது.

About the author

Thamizh Nadu .com

Leave a Comment