Athigaram 2
Kural- 0020
அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.
Kural in English Transliteration:
Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum
Vaanindru Amaiyaadhu Ozhukku.
Couplet Explanation:
If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.
மு.வ உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
கலைஞர் உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற
நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட
வேண்டும்.
Rev. Dr. G.U.Pope Translations:
When water fails, functions of nature cease, you say;
Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’.
Yogi Shuddhananda Translations:
Water is life that comes from rain
Sans rain our duties go in vain.
Easy reading Thirukurral by Parimelazhagar :
“நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.”
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.
தொடரமைப்பு:யார் யார்க்கு உம் நீர் இன்று உலகு அமையாது எனின், ஒழுக்கு வான் இன்று அமையாது.
- ‘பரிமேலழகர் உரை:
- (இதன்பொருள்) யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் = எவ்வகை மேம்பட்டார்க்கும் நீரையின்றி உலகியல் அமையாதாயின்;
- ஒழுக்கு வான் இன்று அமையாது = (அந்நீர் இடையறாது ஒழுகும்) ஒழுக்கும் வானையின்றி அமையாது.
- பரிமேலழகர் உரைவிளக்கம்:
- பொருள் இன்பங்களை ‘உலகியல்’ என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின்.
- இடையறாது ஒழுகுதல், எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல்.
- நீர்இன்றி அமையாது உலகு என்பது, எல்லாரானும் தெளியப்படுதலின், அதுபோல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படுமென்பார், ‘நீரின்றமையாதுலகு எனின்’ என்றார்.
- இதனை, நீரையின்றி அமையாது உலகாயின், எத்திறத்தார்க்கும் மழையையின்றி ஒழுக்கம் நிரம்பாது என உரைப்பாரும் உளர்.
- இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.
- தெய்வப்புலமை திருவள்ளுவர் செய்த அறத்துப்பால் அதிகாரம் ‘வான்சிறப்பும்’ அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் முற்றும்.
Leave a Comment
You must be logged in to post a comment.