Tamil Language Thirukkural

Thirukkural -0019

Written by Thamizh Nadu .com

Athigaram 2

Kural- 0019

அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1

Kural in Tamil:

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

Kural in English Transliteration:

Thaanam Thavamirantum Thangaa Viyanulakam
Vaanam Vazhangaa Thenin.

Couplet Explanation:

If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.

மு.வ உரை:

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

கலைஞர் உரை:

இப்பேருலகில்  மழை   பொய்த்துவிடுமானால்  அது, பிறர் பொருட்டுச்
செய்யும்   தானத்திற்கும்,  தன்பொருட்டு   மேற்கொள்ளும்  நோன்புக்கும்
தடங்கலாகும்.

Rev. Dr. G.U.Pope Translations:

If heaven its watery treasures ceases to dispense,
Through the wide world ceases gifts, and deeds of ’penitence’.

Yogi Shuddhananda Translations:

Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.

Easy reading Thirukurral  by Parimelazhagar :

“தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனின்.” 

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்

வானம் வழங்காது எனின்.

தொடரமைப்பு: வியன் உலகம் தானம் தவம் இரண்டு உம் தங்கா வானம் வழங்காது எனின்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா = அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா;
வானம் வழங்காது எனின் = மழை பெய்யாதாயின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
‘தான’மாவது, அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடுங் கொடுத்தல்.
‘தவ’மாவது, மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டிசுருக்கல் முதலாயின.
பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின்மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.

About the author

Thamizh Nadu .com

Leave a Comment