Athigaram 2
Kural- 0017
அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2
இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1
பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1
Kural in Tamil:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
Kural in English Transliteration:
Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili
Thaannalkaa Thaaki Vitin.
Couplet Explanation:
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).
மு.வ உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்
சாலமன் பாப்பையா உரை:
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்
கலைஞர் உரை:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்
Rev. Dr. G.U.Pope Translations:
If clouds restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean’s wide domain.
The treasures fail in ocean’s wide domain.
Yogi Shuddhananda Translations:
The ocean’s wealth will waste away,
Except the cloud its stores repay.
Except the cloud its stores repay.
Easy reading Thirukurral by Parimelazhagar :
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகி விடின்.
தொடரமைப்பு:நெடு கடலும் தன் நீர்மை குன்றும், எழிலி தான் நல்காது ஆகி விடின்.
- பரிமேலழகர் உரை:
- (இதன்பொருள்) நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் = அளவில்லாத கடலும் தன்னியல்பு குறையும்;
- எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் = மேகந்தான் (அதனைக்) குறைத்து (அதன்கட்) பெய்யாது விடுமாயின்.
- பரிமேலழகர் விளக்கம்:
- உம்மை சிறப்பும்மை.
- தன்னியல்பு குறைதாலாவது, நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணிமுதலாயின படாமையும் ஆம்.
- ஈண்டுக் ‘குறைத்தல்’ என்றது முகத்தலை. அது “கடல் குறை படுத்தநீர் கல் குறைபடவெறிந்து” (பரிபாடல்-20) என்பதானானும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம்.
- இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.
Leave a Comment
You must be logged in to post a comment.