அனுமனின் வாலில் ஒரு மணி

*ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம……!!* நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம். *அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா?* தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி…. ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.சீதாப்பிராட்டியை… Continue reading அனுமனின் வாலில் ஒரு மணி

தென்காசி_திருக்கோயில்

வடக்கே காசிக்கு போனால் திரும்புவது சாத்தியமில்லை என எண்ணியே வயதான காலத்தில் காசிக்கு சென்று மரணித்தால் சொர்க்கம் என்ற மனநிலை இருந்த காலம் அது.வடக்கே காசிக்கு சென்று அடையும் புண்ணியத்தை தெற்கேயே பெறலாம் என்ற வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டதுதான் தெற்கிலும் காசி வேண்டும் என்ற இந்த விஸ்வநாதர் கோயில்.. தென்காசியாக நம்மை மகிழ்விக்கிறதுவெள்ளைகாரன் அதை கட்டினான் இதை கட்டினான் என அதிசயப்படும் நம்மாலே கோபுரவாசலில் வீசும் அந்த காற்றுடன் கூடிய அதிசயம்… Continue reading தென்காசி_திருக்கோயில்

கடவுள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

—————————————————————————————————————- ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள் அப்பொழுது சூரிய பகவான் அசிரியாக தோன்றி “வேத குருவே! உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன் இன்று சூரியனான நான் மறைவதற்குள்… Continue reading கடவுள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி

பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தர சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர். அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. அரசின் உதவித்தொகையால் வெளிநாடு சென்று… Continue reading இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி

இயற்கை நிறங்கள்

தோழமைக்கு வணக்கம் ;- எவ்வளவோ நிறங்கள் இயற்கையில் இருந்தாலும், இந்த #அரக்கு_சிவப்பு என்று தமிழில் சொல்லக்கூடிய மெரூன் / செர்ரி ரெட் என்ற நிறமே என்னை மிகவும் கவர்ந்ந நிறம் என்றே சொல்லலாம். — “ஏய் சுஜி, இங்க வந்து பாரேன் – இந்த தடவையும் மெரூன் கலர் காட்டனே உன் பர்த்டேக்கு எடுத்து வந்திருக்கான் ” – இது எங்க அம்மாவின் ஓபனிங் டயலாக், அதன்பிறகு அக்கா அவரது பங்குக்கு – ” இவனுக்கு வேற… Continue reading இயற்கை நிறங்கள்

80’s Kids சலூன் அனுபவம்

#தோழமைக்கு_வணக்கம் ;- அதென்னவோ அந்த நாள் முதல் இன்று வரை சலூன் கடைகள்தான் நமக்கு தகவல் மையங்கள், செய்தி கூடங்கள் எல்லாம். வீட்டு வாசலுக்கே தினசரி பத்திரிக்கை ஆண்டாண்டு காலமாக வந்தாலும் கூட முடிதிருத்தும் நிலையங்களுக்குப் போனால் , அங்கே காத்திருக்கும் தருணங்களில் ஓரிரு பக்கங்களாக செய்திதாள்களை புரட்டுவது தனிசுகமே. — சமீபத்திய ஊரடங்கில் வேர் விட்டு விழுது பரப்பிய தாடி, மீசை, தலைமுடி எல்லாம் சீரமைத்திட தம்பி கண்ணனின் கடைக்குச் சென்றேன் – அவர்தான் நமது… Continue reading 80’s Kids சலூன் அனுபவம்

தமிழ் ஒரு பிழையும் பொறுக்காது

#தமிழ் #வாழ்க ;- இது நீண்டகாலமாக திராவிடக் கட்சிகள் ( குறிப்பாக தி.மு.க ) அரசியல் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தை.. சரி , என்னளவில் தமிழ் வாழ்க என்ன செய்யவேண்டுமெனத் தெரியவில்லை. ஆனால் , தமிழ்மொழி அழியாமல் இருக்க தமிழ்நாட்டில் ஓர் சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. அது என்னவெனில்.. தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து டிஜிட்டல் போர்டு, ஃப்ளக்ஸ் போர்ட், லித்தோஸ் அச்சடிக்கும் 1. அச்சக உரிமையாளர்கள் 2. அங்கே டைப்… Continue reading தமிழ் ஒரு பிழையும் பொறுக்காது