16. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் ஸ்ரீ மஹாஸ்வாமியின் ஞானஒளி வீசும் கண்களைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சியில் அவரும் கூரிய நோக்குடன் இணைந்துகொண்டார் என்று சொல்வது சற்றே மிகைப்படுத்தலாக இருக்கும். சரி.. அப்படியில்லை என்றாலும் அந்த ஆராய்ச்சியை அவர் எதிர்க்கவில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். என்னுடைய கண்களின் ஒளியின் வளர்ச்சியும் என்னுடைய புரிதல்களும் என்னுடைய பாணியாக அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 016
Author: Mannai RVS
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 015
15. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் இந்த வருஷத்தின் ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒரு விசித்திர எண்ணமானது பின்னர் தீர்மானமானது. ஸ்தூல சரீரமாக நாம் பார்க்கும் ஸ்ரீ மஹாஸ்வாமி அந்த கட்டுக்குள் மட்டும் இல்லை என்பது தர்க்கத்திற்கு இடமில்லாத அறிகுறிகள் மூலம் தெரியவந்தது. உதாரணத்திற்கு ஆசி வழங்கும் போது ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் உருவம் மெதுவாய்க் கரைந்து போய் தேகத்தின் ஓரங்கள்… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 015
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 014
14. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் கார்வெட்டிநகர் சாலைச் சந்திப்புக்கு வந்துவிட்டோம். அவர் வலதுபுறம் திரும்பி தாமரைக்குளம் செல்லவேண்டும். நான் இடதுபுறமிருக்கும் காந்தி ஆஸ்ரமம் நோக்கி நடக்கவேண்டும். இப்போது அவரைப் பிரியப்போகிறேன். என்னுடைய இதயம் கனத்தது. நடை மெதுவாகி கால்கள் பின்னியது. அந்தச் சாலைச் சந்திப்பில் ஸ்வாமிஜி எனக்காக சிறிது நேரம் காத்திருந்தார். நான் அவரைப் பிரதக்ஷிணமாகச் சுற்றி… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 014
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 013
13. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் இரவில் மஹாஸ்வாமியின் திருவடிபற்றி….: கார்வெட்டிநகர், ஜுன், 1971 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சாதுர்மாஸ்ய விரதம் இன்னும் துவங்கவில்லை. ஸ்ரீ மஹாஸ்வாமி எந்நேரமும் இங்கிருந்து புறப்படலாம். அவர் முகாமிட்டிருந்த ஆஸ்ரமத்து நண்பர்கள், அவரது உதவியாளர்கள், நமஸ்கரிக்க வந்த பக்தர்கள், நான் என்று எல்லோருமே அவருடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து அடுத்தது என்ன நடக்கும் என்பதை யூகிக்க… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 013
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 012
12. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் காவி உடைக் குவியல்: கார்வெட்டிநகர், ஏப்ரல், 1971 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஒருநாள் ஸ்ரீ மஹாஸ்வாமி தான் தங்கியிருந்த இடத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக வெகுதூரம் நடந்து சென்றார். வேணுகோபால ஸ்வாமி கோவிலுக்குப் பின்னால் மேற்குத் திசையில் சென்றுவிட்டு மதியம் முடிந்து மாலை ஆரம்பிக்கும் நேரத்திற்குதான் திரும்பிவந்தார். இம்முறை அவர் பின்னால் ஒரு பெருங்கூட்டம் சென்றது.… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 012
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 011
11. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் அயல்தேசத்துக்காரனான எனக்கு பாரம்பரியப்படி சந்நியாசி வரும் அறைக்குள் வசித்திருக்க உரிமையில்லை. துள்ளிக்குதித்து எழுந்தேன். பாய்படுக்கைகளை வாரிச் சுருட்டினேன். எப்போதுமே பாதி அடுக்கப்பட்டிருந்த பெட்டியில் மீதியிருக்கும் துணிகளை அமுக்கிக்கொண்டு அறைக்கு வலதுபுறமிருக்கும் வெளி வராண்டாவுக்கு ஓடி வந்துவிட்டேன். உள்ளே நானிருந்த இடத்தின் சுவருக்குப் பின்னால் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே என் கடையை விரித்துவிட்டேன்.… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 011
பாரதியார் சரித்திரம் – செல்லம்மாள் பாரதி
இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவி யென்று பலராலும் ஏசப்பட்டேன் ” என்று நேர்பட உள்ளத்துணிவோடு திருமதி. செல்லம்மா பாரதி எழுதிய பாரதியார் சரித்திரம் வாசித்தேன். இப்போது பார் புகழும் பாரதியார் அப்பொழுது வாழ்ந்த நிஜக் கதை. பல இடங்களில் வாசிக்கும் எனக்கு கண்ணீர் வந்தது. உணர்ச்சிப் பிழம்பாக இருந்த பாரதியார் தான் எழுதியபடியே வாழ்ந்திருக்கிறார்; வாழ்ந்ததை எழுதியிருக்கிறார் என்பது திருமதி. செல்லம்மாவின் வார்த்தைகளில் தெரிகிறது. பாரதியாருக்கு என்னைப் போலவே தோசையும் காப்பியும்… Continue reading பாரதியார் சரித்திரம் – செல்லம்மாள் பாரதி
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 010
10. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் கார்வெட்டிநகர், 1971 மார்ச் மாத ஆரம்பம்…. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஸ்ரீ மஹாஸ்வாமிகள் ஆஸ்ரம முகாம். ################################# 1971 ஃபிப்ரவரி மாத இறுதியில் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் காஞ்சீபுரத்தை விட்டு பாதயாத்திரை கிளம்பினார். எத்தனை நாள்கள் இப்படி யாத்திரை என்று திட்டமிடல் எல்லாம் இல்லை. வடமேற்காக எண்பது கிலோமீட்டர்கள் நடந்த பிறகு ஆந்திர பிரதேசத்திலிருக்கும் கார்வெட்டிநகரை… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 010
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 009
9. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் கொஞ்சமேனும் உயர்ந்த நிலையில் இருந்த எண்ணங்களோடு சிறிது நேரம் ஓய்வெடுத்தேன். சத்திரத்திலிருந்து யாரோ ஒருவர் அங்கே வருவது வரையில் நான் என் சுயநிலைக்கு வரவில்லை. ஸ்ரீ மஹாஸ்வாமி திரு. செட்டியை கூப்பிட்டு அனுப்பியிருந்தார். என் கையில் அவரின் திருவடி மணலை எடுத்து சேமித்து வைத்திருந்த சிறு பை பத்திரமாக இருந்தது. நான்… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 009
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 008
8. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் அமைதியான தரிசனம் — காஞ்சீபுரம், 1970, ஜூன் 5, வெள்ளிக்கிழமை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காலையில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ஹோட்டலில் அவசரவாசரமாகக் குளித்து உடையணிந்து தயாரானேன். காலை 6:40 மணி வாக்கில் என்னுடைய அறையில் ஒரு பிரகாசத்தை உணர்ந்தேன். சில நிமிஷங்கள் அப்படியே உறைந்து போனேன். ஸ்ரீ மஹாஸ்வாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். ஆனால்… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 008