காட்ஜெட் என்றால் என்ன . ஒரு தனித்துவமான கருவி ஏதோ ஒரு விஷயத்திற்காக ஒருவருடன் சதா சர்வகாலமும் இருக்கும் . அந்த கருவி அல்லது பொருள் பொக்கிஷமாக இருக்கும். அவரால் அது இல்லாமல் இருக்க முடியாது . எந்நேரமும் அது அவர்களுக்கு வேண்டும். அந்த பொருள் அவர்களுக்கு ஏதோ ஒரு புத்துணர்ச்சியை, தைரியத்தை, சந்தோஷத்தை ,பெருமையை அவர்களுக்கு கொடுக்கும். வெவ்வேறு காலகட்டத்தில் நமக்கு இந்த காட்ஜெட்டுகள் நமக்கு பரிச்சயமாகி இருக்கிறது. இதோ நமக்கு தெரிந்த பல வகை காட்ஜெட்டுகள் .
ஆந்த காலம் முதல் இந்த காலம் வரை .மஹாபாரதத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைவராலும் பெரும்பான்மையாக கவரப்பட்டது கர்ணன் மட்டுமே .அன்று முதல் இன்று வரை நம்மால் அவரை நினைவில் வைத்து போற்றப்படுவதற்கு அவருடைய நட்பும்,குணமும் மட்டுமல்ல அவருடைய காட்ஜெட்டும் தான். ஆம் இன்றும் கர்ணனை நாம் தனியாக நினைத்ததில்லை .கர்ணன் என்றாலே நம் நினைவிற்கு வருவது அவருடைய கவச குண்டலம் தான் . அது இல்லாமல் அவர் இல்லை .அதுவுக்கே அவரின் பலம்.அதுவா அவரின் வாழ்க்கை.
மேலோகம் என்று இருந்தால் அதில் முதலில் நமக்கு அறிமுகமானவர் நாரதர் மட்டுமே. எந்தவகை மேலாக கதையானாலும் நாரதர் இல்லாமல் கிடையாது.இன்னும் சொல்லப்போனால் அவர் தான் மேலோகத்தின் ரிஸப்ஷனிஸ்ட் அவர் தான் .அவரை பார்த்தாலே அவருடைய உடைகளை தாண்டி ,அவருடைய கொண்டையை தாண்டி அவரை நமக்கு பரிச்சயம் செய்வது அவருடைய சப்பலாக்கட்டை மற்றும் தம்புராவும் தான் . அவைகள் இல்லாமல் அவரை பார்த்தால் சிவனுக்கே அவரை அடையாளம் தெரியாது. நாரதரை விட அவருடைய காட்ஜெட்டுகள் மிகவும் பிரபலம்.
மகாத்மா காந்திஜியின் காட்ஜெட் என்ன தெரியுமா ? என்னது மகாத்மா காந்திஜி காட்ஜெட் வைத்திருந்தாரா என்று அதிகம் யோசிக்காதீர் .அவரின் ஒரே காட்ஜெட் அவரின் இடுப்பில் தொங்கிய கடிகாரம் மட்டுமே. நேரம் தவறாமல் அயராது உழைத்த அந்த காந்தி மஹான் அவர்களின் பொக்கிஷம் இந்த கடிகாரம். காட்ஜெட் என்றாலே என்ன தனித்துவமான ஒரு கருவி . அப்படி பார்த்தால் மிகவும் நூதனமாக, தனித்துவமாக அவரின் இடுப்பில் தொங்கிய அந்த கடிகாரம் தான் அவரின் காட்ஜெட்.
நம் முன்னோர்களின் காட்ஜெட் எதுவாக இருந்திருக்கும் சொல்லுங்கள் .அதாவது 1940,50,60 .70 களில் எது காட்ஜெட்டுகளாக நம் தாதாக்களின் கையில் இருந்திருக்கும். செல்லப்பொட்டி என்று பாசத்தோடு அழைக்கப்படும் வெற்றிலைபாக்கு போட்டியே அவர்களின் காட்ஜெட். ஆம். அவை இல்லாமல் பொழுது விடியாது பொழுது போகாது . அந்த பொட்டி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அதற்குள் வெற்றிலை பாக்கை தாண்டி பல ரகசியங்கள் இருக்கும். ஒரு சிலர் கத்தி கூட வைத்திருப்பர் தற்காத்துக்கொள்ள. தன்னை தவிர வேறு யாரையும் தொட அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் உணர்வுகளோடு ஒன்றிய பொருள் அது. அதுவும் காட்ஜெட்டே.
1980, 90 களில் மக்கள் உடலோடு ஒட்டிக்கொண்டிருந்தது அவர்களின் மணி பர்ஸ் . ஒவ்வொரு பர்ஸும் ஒரு காவியம்.பல கதைகளும் கவிதைகளும் சொல்லும். அவை பணத்திற்காக மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டது அல்ல. குடும்ப போட் ஆரம்பித்து,பெற்றோர் ஞாபகமாக,காதலி ஞாபகமாக ,நண்பனின் ஞாபகமாக அது ஒரு மினி பிராவை போல் பல நினைவுகளை சுமந்து செல்லும் . பணம் இருக்கோ இல்லையோ அதில் பல சுவாரசியங்கள் இருந்தன. அந்த கால கட்டத்தில் பர்ஸை மையடுத்தாத கதைகள் மிக குறைவு.ஒவ்வொரு பிகபக்கெட்டிலும் பல சோகங்கள் இருக்கும். அவைகள் மனித உறவுகளின் இழப்பை விட கொடுமையானது.
அந்த கால கட்டத்தை தாண்டி 2000 ஆண்டில் பல தொழில் நுட்ப காட்ஜெட்கள் வர ஆரம்பித்தன .உதாரணத்துக்கு பேஜர் . ஒவ்வொருவரின் இடுப்பிலேயும் பெல்ட்டோடு அதனை மாட்டி கொண்டு தனக்கு என்னவோ ஒரு பாத்து பவுன் தங்க ஜெயின் ஆஃபீஸுல குடுத்த மாதிரி திமிரா ,தெனாவட்டா அந்த கால இளைஞர்களும் ,மெடிக்கல் ரெப்புகளும், சேல்ஸ்மேன்களும் ,வியாபாரிகளும் கொடுத்த அளப்பரைகள் தங்க முடியாது.அப்போது ஆக்கிரமிக்கஆரம்பித்ததுஅந்த பீப் சத்தம் நம்மை . இன்று நொடிக்கொருமுறை மொபைலை எடுத்து வாட்சாப் மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்க்கிறோமே அதன் முதல் தலைமுறை இதுவே.
வெறும் சிலர் மட்டுமே வைத்துக்கொள்ளும் கைபேசியாக வந்தது நம் மொபைல் போன். நமக்கு அழைப்பு வந்தாலும் காசு போகும் ,நாம் அழைத்தால் இரு மடங்காக பைசா போகும். பின்பு சில வருடங்களில் இன்கமிங் இலவசமானது . மொபைல் வர்த்தகம் அதிகமாக தொடங்கியது. 2005 களில் ஸ்மார்ட் போன் வளர ஆரம்பித்தது. கூகிளும் ஆப்பிளும் அந்த துறையையே புரட்டி போட்டார்கள். 1865 ல் துவங்கிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நோக்கியா போன்ற ஜாம்பவான்கள் கூட காணாமல் போனார்கள் . கொஞ்சம் கொஞ்சமாக சீனா உள்ள நுழைந்து அந்த வர்த்தகத்தை ஆக்கிரமித்து வருகிறது. இப்போது காட்ஜெட் உலகம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சரி இனி என்ன மாதிரி எல்லாம் எதிர்பார்க்கலாம். சாம்பிளுக்கு சில.
ரோபோக்களும், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கருவிகளும் நம் வாழ்வின் அங்கமாக இருக்கும். இப்போது எப்படி வங்கியில் நாம் யார் உதவியும் இன்றி பரிவர்த்தனை செய்கிறோமோ அதே போல் எந்த மனித உதவியும் இல்லாமல் வாழலாம். டெக்னாலஜி நம்மை சூழ்ந்து இருக்கும். நாம் எடுத்து செல்லும் குடை நமக்கு வானிலை அறிக்கை படிக்கும், இப்போது தோடு திரையில் கைபேசியில் நாம் செய்யும் விஷயங்களை இனி சுவற்றிலும் ,காற்றிலும் வரும் பிம்பங்களை தொட்டு நம் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளலாம். இது போல் ஆயிரம் வரப்போகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் நம் உடலில் ஒரு சிப்பை செலுத்தி நாம் நினைத்தமாத்திரத்தில் வேலைகள் நடக்கும். குப்பை தொட்டி முதல் நாம் பயன்படுத்தும் அணைத்து விஷயங்களிலும் விஞ்ஞானம் விளையாடும் இன்று இந்த காட்ஜெட் உலகம் நம் கற்பனைக்கு எட்டாதது .கட்டற்று வளர்கிறது.
நொடிக்கு ஒரு கண்டுபிடிப்பு இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் நமக்காக கண்டுபிடிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது. இந்த டிஜிட்டல் காலத்தில் அதை பற்றிய விஷயங்கள் உடனே வெளிவர அதற்கு போட்டியை இன்னும் பல அதனை மெருகேற்றுகிறார்கள். இந்த கால கட்டத்தில் வாழும் நாம் அனைவருமே அதிஷ்டாசாலிகள். “காசி நகர்புறது புலவர் பேசும் உரையை நாம் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி அமைப்போம் ” என்ற முழங்கிய தீர்க்கதரிசி மகா கவி பாரதியை நினைத்து எதிர் வரும் காலங்களில் நம்மை அசத்தப்போகும் காட்ஜெட்டுகளுக்காக காத்திருப்போம்.
Leave a Comment
You must be logged in to post a comment.