படம் ஹிட்டா இல்ல பிளாப்பா அல்லது சூப்பரா இல்ல மொக்கையா என்பது அல்ல விஷயம் . விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கலாம். எதற்கு என்ற காரணம் சொல்லாமல் ரசிக்கலாம் .ஆனால் சினிமா என்பது தன் ரசிகர்களையும் தாண்டி அனைவருக்குமானதாக இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் .சர்க்காரின் பெரிதும் பேசப்பட்டது கதை திருட்டு. அதாவது கதையின் கரு. இன்னும் சொல்லப்போனால் அந்த ஒற்றைவரி கதை. சரி. அதுமட்டுமா திருடப்பட்டது. யதார்த்தம் என்ற போர்வையில் இவர்கள் இந்த கதையில் புகுத்திய அனைத்துமே அபத்தங்கல் . கதை வசனம் காட்சிகள் அனைத்தும் வீண் விரயங்கள் .
ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து படம் பார்க்க வரும் குடும்பங்களை இப்படி ஏமாற்றுவது நியாயமில்லை என்று என்ன தோன்றுகிறது.
படம் ஆரம்பம் முதல் கட்சியே சலிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது ஹீரோவின் பெயர் சுந்தர். G யில் ஆரம்பிக்கும் நிறுனத்தின் ceo . அதாவது ஓனர் கூட இல்லை . சுந்தர் பிச்சை போன்றவர் நீங்கள் என்று சொல்லி கதை ஆரம்பித்திருப்பார் போல . அவரை corporate criminal அப்படின்னு வேற சொல்லிக்கிறார் . பேர் வைப்பதில் கூட சுயமாக யோசிக்காத கதாபாத்திரங்கள். வில்லன் ராதாரவி ஒரு அரசியல் கட்சி தலைவர் போன்று வாயை வைத்து கொள்கிறார் . இது போன்று படத்தில் எங்குமே கற்பனை இல்லாதது மிக பெரிய வருத்தம் ஏமாற்றம் . அப்படி பஞ்சம் இருக்கும் ஒருத்தர் எதற்காக படம் எடுக்க வேண்டும் . அப்பாவி சினிமா ரசிகனை ஏமாற்ற வேண்டும் .
முதல் காட்சியில் பல கோடிகளுக்கு அதிபராக ரோல்ஸ் ராய்ஸ் காரில் கன்வேயர் சகிதம் வருபவர் அடுத்த காட்சியில் கட்சி அலுவலகத்துக்கு இடம் இல்லாமல் சேரியில் தஞ்சம் புகுகிறார். அதற்கு அடுத்த காட்சியில் ஆடி காரில் போகிறார் ,அதற்கு அடுத்த காட்சியில் மோட்டார் பைக்கில் போகிறார். தன் சொந்தங்களை முதல் காட்சியில் பார்த்தவர் அதற்கு பின் அவர்களை சந்திக்கவே இல்லை . படத்தில் தங்கள் ஓட்டை இழந்தவர்கள் அனைவரும் கோர்ட்டுக்கு பொய் வழக்கு போடுவது போல் இந்த படத்தில் இவர் சித்தரித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்கள் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக வழக்கு போடலாம்.
இப்படி அவர் எடுத்திருக்கும் reference மூலம் அவர் ரசிகனுக்கு துரோகம் செய்யவில்லை தன் தொழிலுக்கும் திரைத்துறைக்கும் துரோகம் செய்திருக்கிறார் . ஆனால் இதை பற்றியெல்லாம் கவலை படாமல் இப்படத்தை பார்த்து பாராட்டுகிறது ஒரு கூட்டம். இதன் மூலக்கதைக்கு சொந்தக்காரருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் கண்டிப்பாக இந்த அபத்தங்கள் தவிர்த்து நல்ல திரைகதை கொண்டு ஒரு சிறந்த படத்தை கொடுத்திருப்பார் என்று நம்ப தோன்றுகிறது .
இப்படி பட்ட கதாபாத்திரங்களும்,காட்சிகளையும் எப்படி இவர் விஜயிடம் சொல்லியிருப்பார் என்று கொஞ்சம் எண்ணி பார்த்தேன் . இதோ என் சிந்தனை .இப்படி தான் இயக்குனர் கதை சொல்லியிருக்க கூடும்.
இயக்குனர் : சார் ஓபன் பண்ணா ஒரு கார்பொரேட் மீட்டிங். எல்லாரும் G கம்பெனி ceo சுந்தர் பற்றி பில்ட் அப் கொடுக்கிறார்கள். ஹீரோ பெயர் சுந்தர் . அதாவது சென்னைக்கு பெருமை சேர்த்த சுந்தர் பிச்சை தான் நீங்க. அவங்க அப்பா பேர மட்டும் மாத்துறோம் சுந்தர் ராமசாமி. படத்துல கூட ஒரு டயலாக் வெச்சிருக்கோம் உங்களால எங்க சென்னைக்கு பெருமைன்னு . அதனால அவருக்கு இது கவுரவம் தான் . நம்ம மேல கேஸ் போட மாட்டார் [ அடேய் அப்பறம் ஏன்டா கார்பொரேட் criminal அப்டின்னு வேறு சொன்னிங்க ] உங்க introduction காட்சியிலே நீங்க styleஆ சிகரெட் பத்த வைக்கறீங்க.
படத்துல இது மாதிரி ஏகப்பட்ட reference இருக்கு சார். ரொம்ப naturala இருக்கும்
சவுக்கு சங்கர் இணையத்துல ஒருத்தர் இருக்கார் அவரை சாட்டை முத்துக்குமார் அப்படின்னு சொல்றோம். சவுக்குக்கு பதில் சட்டை .அப்படியே உங்க பழைய படத்துலேர்ந்து கூட கொஞ்சம் reference எடுத்திருக்கோம் .
நீங்க போன படத்துல இட்லில கம்யூனிசம் பேசின மாதிரி இதுல தக்காளில விவசாயிகள் பிரச்சனை பேசுறோம். கூடவே ஒரு flashback கதை இருக்கு .அது ஒன்னு போதும் சார் கடலோரம் இருக்குறவங்க அத்தனை பேர் மனசுலேயும் இடம் பிடிச்சிரலாம் .செண்டிமெண்ட் டயலாக் அள்ளும் .
ஒரு செமையான எமோஷனல் பிளாக் இருக்கு.இப்போ சமீபத்துல நடந்த மாதிரி ஒரு குடும்பத்தையே கொளுத்தி தற்கொலைப் பண்ணிக்க வைக்கிறோம் .அதுல ஒரு குழந்தை பிழைக்குது அதைப்பார்த்து ஹீரோ உருகிற சீன்ல அழாதவங்களே இருக்க முடியாது . actually நம்ம படத்துக்கு ஹீரோயின் தேவையில்லை ஆனா கம்மிட் பண்ணிட்டோம் . அதனால அவங்க உங்க கூடவே படத்துல வருவாங்க.என்னிக்கெல்லாம் ஷூட்டிங் வாரங்களோ அன்னிக்குல்லாம் scenla வருவாங்க .[ கதையில யாரு ஹீரோயின்,ஏன் கூட வராங்க,என்ன relation ,நடுவுல எங்க போனாங்க எதுவமே சொல்லாலேயேடா ]கூகிள் கூகிள் மாதிரி ஒரு பாட்டு கேட்டிருக்கேன் சார் அதே மாதிரி தண்ணி அடிச்சிட்டு பாடுற மாதிரி ஒரு பாட்டு இருக்கு . அதுக்கு வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாட்டு மாதிரி ஒரு பாட்டு கேட்டுருக்கேன் . [ கருமம் பேசாம அந்த பாட்டுகளையே போட்டிருக்கலாம் ]
படத்துல நாம 234 தொகுதிக்கும் ஆல் தேடுறோம் அதுல நிஜமாவே தமிழ் போராளிகளை காட்சிப்படுத்துறோம் அது இன்னும் லைவ் ஆ இருக்கும் . பியூஷ் மனுஷ் ஒத்துக்கிட்டாரு. [ அவன் என்னடா ஒத்துக்கறது விளம்பரத்துக்கு தானே அவன் எல்லாம் பன்றான் ] அதே மாதிரி மீனவ குப்பத்துல நீங்க பேசும் போது சீமான் மாதிரி கைய உயர தூக்கி சத்தமா பேசுறீங்க .அப்படியே அவரது மார்க்கெட்டையும் புடிச்சிடலாம்.
கிளைமாக்ஸ்ல ஒரு சமாதி காட்சி வருது அங்க தான் ட்விஸ்ட் இருக்கு. ஒரு சபதம் கூட வைக்கலாமான்னு யோசிக்கிறேன் அப்பறம் தமிழ் படம் 2 மாதிரி இருக்குமேன்னு யோசிக்கிறேன் . [ அடேய் இந்த படத்துக்கு அது எவ்வளவு தேவலாம் டா ]
புதுசா ஒரு நிஜ அரசியல்வாதியை பேசிகிட்டு இருக்கேன்.சும்மா டெர்ரரா இருப்பார். அவருக்கு அசிஸ்டன்ட் நம்ம ராதாரவி சார் . அவரும் அரசியல்வாதிதானே .ரொம்ப optaa இருக்கும்.
[ அடேய் ரெண்டு பேருமே நிஜ அரசியல் வாழ்க்கையில காமெடி பண்றவங்கடா ] டான்ஸ் எப்பவும் போல நீங்க பின்னிடுவீங்க . அதே steps அதே movements கொஞ்சம் வித்தியாசமா பண்ணா போதும் . உங்க ரசிகர்களும் அதன் எதிர்பார்ப்பாங்க . மூணு சண்டை இருக்கு . மூணும் தாறு மாற இருக்கும். ஒரு அடி தான் அடிபீங்க . தெலுங்கு படத்துல அல்லு அர்ஜுன் மாதிரி . அதே மாதிரி கலவரத்தை தடுத்த போலீஸ்காரங்களையும் அடிக்கிறீங்க .காமெடிக்கு யோகிபாபு இருக்காரு [ ஆனா அவரை விட நீங்கரெண்டுபேரும் தான் அதிகம் காமெடி பண்ணுரீங்க ]
இன்னொரு highlight இருக்கு பாஸ் கடைசி கட்சியில . நீங்க ஜெயிச்சு ஒரு IAS ஆபிஸர் CM ஆக்குறீங்க. அதாவது நம்ம சகாயம் சார் மாதிரி ஒருதத்தர் சர்குணம் IAS.
ஒரு காட்சியில உங்கள லைவ் வீடியோ எடுக்கும் ஒருத்தர கிட்ட கூட்டு ஒரு டயலாக் பேசுவீங்க பாருங்க ” எடுறா உங்க voter ஐடியை ” அப்டின்னு . எல்லாரும் அரண்டு போய் ஒட்டு போட போயிடுவாங்க . நீங்க ஜெயிப்பீங்க . இன்னொரு சஸ்பென்ஸ் கூட இருக்கு . வில்லியா வர்ற வரலக்ஷ்மி பெயர் பாப்பா என்கிற கோமளவல்லி . இந்த reference எங்கேந்துன்னு கேக்காதீங்க .
அடேய் மூலக்கதை மட்டுமில்லை frame by frame எதுவமே உன்னுடையது இல்லை .எல்லாமே அடுத்தவனோடது.
இயக்குனர்களே தமிழ் சினிமா பல அருமையான படைகளை கொடுத்து பல சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கிறது. திருஷ்டியாக இது போன்ற படைப்புக்களை தவிருங்கள். இல்லையேல் theatreக்கு வந்து படம் பார்ப்பவர்கள் அறவே அற்று போய் விடுவார்கள். திருட்டு விசிடிகாரர்களை வாழவைக்காதீர்கள் .
இனியாவது ஒரு சுய கற்பனையில் ஒரு படைப்பினை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.
Leave a Comment
You must be logged in to post a comment.