10-06-2021
#வைகாசி_மாத_அமாவஸ்யை_திதி
இது எங்கள் குருநாதர்
#எழுத்துச்சித்தர்_பாலகுமாரன்
இறைவனடி சேர்ந்த நாள் –
இன்றும் அவரது நீங்காத நினைவுகள்
நம்மைச் சுற்றியே.
—–
மறக்க முடியாத 2018 ஆம் ஆண்டு
ஐயன் பாலகுமாரன்
காவேரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட நாள் முதலாய்
தினந்தோறும் பிரார்த்தனைகள்,
அர்ச்சனைகள் என இறுகியிருக்க,
திருக்கோடிக்காவல்
திருவாவடுதுறை
அம்மன்குடி துர்க்கை
திருவலஞ்சுழி அஷ்டபுஜ காளி,
கதிராமங்கலம் துர்க்கை – என்று
தினம் ஒரு கோயிலிலே
அபிஷேகங்கள் என்று நான் ஒருபக்கம்
என்றால் –
எனது அக்காவோ வீட்டில்
உபவாசம் இருந்து பிரார்த்தனை
செய்தபடியே இன்னொரு புறம்.
#2018_மே_13_ஆம்_தேதி
ஞாயிறன்று இரவு –
அண்ணா Seetharaman Subramanian
அவர்களுடன்
சேலம் வரலாற்று கருத்தரங்கம்
போய் வருகிறோம்.
அப்போது இரவு – 7 மணி முதல்
8. 40 வரை வாட்ஸ் அப்பில்
சந்தோஷமாக உரையாடுகிறார்
ஐயன்
// எப்படி இருந்தது சேலம் கூட்டம் ?
இதுபோல கருத்தரங்கள்தான்
வரலாறு அறிய தேவை
சீதாராமன் நலமா ?
ராஜவேலு சாரை நான் விசாரித்தேன்
என்று சொல்
வீட்டுக்கு போய் message செய் //
இப்படியாக சாட் செய்தபடியே
வீடு வந்து சேர்ந்தவுடன் –
நான் சொல்கிறேன் அம்மாவிடம்
அம்மா , ஐயா form க்கு வந்துட்டார்,
சீக்கிரம் Discharge ஆகி வீட்டுக்கு
வந்துடுவாராம்.
#14ஆம்தேதி_திங்கள்கிழமை
ஐயாவின் மொபைல்போனிலிருந்து
Message .
‘ GOOD MORNING RAJA ‘
அப்பாடா , ஐயா சரியாகிடுவார் என
ஒரு சின்ன ரிலாக்சேஷனோடு
வேலைக்கு போய்விட்டு
வீடு திரும்பினால் இரவு 7 மணிக்கு
அண்ணா Krishna Krishnamoorthy
போன் செய்து
‘ ராஜா , எங்க இருக்க ?
அண்ணா –
இப்பதான் வீட்டுக்கு வந்தேன்
அப்படியா
ஸ்ரீவாஞ்சியம் போய்ட்டு வரணுமே,
சரிண்ணா , உடனே கிளம்புறேன்
ஒரு நிமிஷம்
#சாந்தாம்மா பேசனுமாம் இரு ‘
என படபடக்கிறார்.
அம்மா சொல்லுங்கம்மா,
ராஜா , ஐயா சிரமப்படறார்
நீ உடனே ஸ்ரீவாஞ்சியம் கோவிலுக்குப் போய் பிரார்த்தனை
செய்துட்டு வா
சரிம்மா , ஒரு மணி நேரத்தில்
அங்கே இருப்பேன் ..
இரவு 8 மணிக்கு மேல்
கோவில்நடை
சார்த்திடுவார்களே என்று
அதிகபட்ச வேகத்தில்
டூ வீலரில் விரைந்தோடிட
ஸ்ரீவாஞ்சியம் கோயிலில்
அர்த்தஜாம தரிசனமும்
இறை தொழுதலும்.
தூக்கம் தொலைந்து போன
அன்றைய இரவு இப்படி
விடிந்திருக்கவே வேண்டாம்
என்று ஆகியது.
#மறுநாள்_15_ஆம்தேதி_செவ்வாய்
வேலை நிமித்தமாக சிதம்பரம் போய்
இறங்கினால்
சென்னையிலிருந்து
பாக்யா அக்கா
( Baghya Lakshmi )
அழுதபடியே
ஐயா , நம்மை விட்டு பிரிந்தார்
என்று சொன்னவுடன்
அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டேன்.
ஒருவழியாக
அண்ணா சீதாராமன் அவர்களுடன்
காரிலேயே சென்னை மயிலாப்பூர்
நோக்கி விரைந்தால்
வழியெங்கும் மொபைல் அழைப்புகள்
வந்த வண்ணம் இருந்தன –
அனைவருக்கும் தகவலை உறுதி
செய்துக்கொண்டே இறுதியாக
ஐயனைக் காண பதட்டத்துடன்.
—
எப்போதுமே உற்சாகமாக இருக்கும்
வாரன் சாலை இல்லம்
களையிழந்து – சூரியக்
கதிர் இழந்து
பகற்பொழுதினை
நரகமாக கடத்திக்கொண்டிருந்தது.
அம்மா Shantha Balakumaran
– என்னை
ஐயனின் கால் அருகிலேயே
நிறுத்தியிருந்தார்.
கூலர் பாக்ஸையும் , மாலைகளையும்
சரிசெய்துக்கொண்டே
நாங்களும்,
ஐயனின் தலைமாட்டிலே
அவரது பிள்ளை
Suryaa Balakumaran சாரும்,
சுற்றி #சத்சங்கத்தினர் அனைவரும்
பகவான் நாமம் முழங்கியவாறு.
அத்துனை பெரிய மனிதர்களின்
வாசகர்களின், பெண்களின்
அழுகையையும்
விசும்பலையும்
அரற்றலையும்
பார்த்தவாறே
கலங்கி நின்றுக்கொண்டிருந்தேன்.
அன்று மாலை
இறுதி ஊர்வலத்திற்கு ஐயனின்
பூவுடலை – கிருஷ்ணா அண்ணாவுடன்
சேர்ந்து வாகனத்தின்
மேலே ஏற்றியபோதுதான்
துக்கம் பீறிட்டது.
// ” இந்த கைகளினாலேயே
குவித்து வணங்கி
இந்த கைகளினாலேயே –
அவரது கரத்தை இறுகப் பற்றி
இந்த கைகளினாலேயே
அவருக்கு உணவு பரிமாறி
இந்த கைகளினாலேயே
அவருக்கு கால் பிடித்துவிட்டு
இந்த கைகளினாலேயே
அவரது தாடியை சீர்செய்து
இந்த கைகளினாலேயே
அவரது உடலையும்
மயானத்திற்கு செல்ல
தூக்குகிறோம் ”
என்ற
வேதனையில் அழுதுதீர்த்தேன்
சில நிமிடங்கள்.
—-
பெசன்ட் நகர் சாலையில்
சிதறிக் கிடந்த பூக்களும்
மயானக்கரையினிலே
குழுமியிருந்த
அலைஅலையான
மனித தலைகளுமே சாட்சி
இப்படி ஒரு மனிதர்
ரத்தமும் , சதையுமாக
இங்கே வாழ்ந்து மறைந்தார்
என்பதற்கு…
இறைவனின் #காலடித்_தாமரைகளிலே
இரண்டறக் கலந்த மலர்களிலே
#என்_கண்மணித்_தாமரையும்
இணைந்து
இன்றோடு மூன்று ஆண்டுகள் .
குருவே சரணம்.
M. #Raja_Mahalingam
திருக்கோடிக்காவல்.
Leave a Comment
You must be logged in to post a comment.