கோவையிலிருந்து ஈரோடு சென்று கொண்டிருந்தது பேருந்து..
லட்சுமி மில் அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம்,
“கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”
என்று கேட்டார்.
“கருமத்தம்பட்டியா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா”
“சரி”
KMCH வந்தது.
“சார்.. கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”
“அட.. இன்னும் இல்லைம்மா”
சின்னியம்பாளையம் தாண்டியது.
“கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”
“ஐயோ அம்மா..
உங்க இம்சை தாங்கலை.
பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கருமத்தம்பட்டி வந்தா நானே சொல்றேன்”
“சரி”
அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார்.
பேருந்து அவினாசியை தாண்டிக் கொண்டிருந்தது.
“கண்டக்டர் சார்… கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” –
தூங்கி எழுந்த அந்தம்மா கேட்டார்.
கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“ஐயையோ.. நான் மறந்திட்டேனே.
நீ ஏம்மா தூங்கின?” பழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்டார் கண்டக்டர்.
பேருந்தில் இருந்த அத்தனை பேரின் கோபமும் கண்டக்டர் மீது திரும்பியது.
“பாவம் அந்தம்மா.. வண்டியைத் திருப்புய்யா..
திரும்ப கருமத்தம்பட்டில கொண்டு போய் அந்தம்மாவ விட்டுட்டு திரும்பி வா” – அநேகமாக எல்லோரும் சொன்னார்கள்…
கண்டக்டருக்கு வேறு வழி தெரியவில்லை. பேருந்தைத் திருப்பினார்.
வந்த வழியே கருமத்தம்பட்டிக்குச் சென்றது.
ஒரு வழியாக சில மணித் துளிகளில் கருமத்தம்பட்டி வந்தது.
“எம்மா.. இறங்கும்மா” – சலித்தபடியே கண்டக்டர் கூறினார்.
பேருந்தில் இருந்த பயணிகளுக்கு முகத்தில் வெற்றிப் புன்னகை.
சாவகாசமாக எழுந்த அந்தம்மா மேலே இருந்து பையை எடுத்துப் பிரித்து அதிலிருந்து
பிரஷர் மாத்திரையை எடுத்துப் போட்டு முழுங்கி தண்ணீர் குடித்து திரும்ப அமர்ந்து தூக்கத்தைத் தொடர்ந்தார்.
“என்னம்மா.. கருமத்தம்பட்டில இறங்கலையா?” – கண்டக்டர் கேட்டார்.
“நான் ஏன் கருமத்தம்பட்டில இறங்கணும்?
கருமத்தம்பட்டி வந்தவுடனே பிரஷர் மாத்திரை மறந்திடாம போட்டுடுன்னு
என் பையன் சொல்லி அனுப்பினான்.
அதான். நான் ஈரோடுல்ல போகணும்?”
இப்போது கண்டக்டருக்கு
பிரஷர் படு பயங்கரமாக எகிறத் தொடங்கியது….!!
? ? ? ?
சரவணன் செல்வா
Leave a Comment
You must be logged in to post a comment.