Tamil Language

அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 12

Written by Dr. Avvai N Arul

பெருமக்களே…
கலைமாமணி சூரிய பிரகாஷ் குயில் பாட்டை மிக இனிமையாகப் பாடி கடந்த பதினைந்து வாரங்களாக, பல்வேறு நிலைகளில் அந்தப் பாடல்களைப் பாடியும், அதற்கேற்ற சில உரை விளக்கங்களையும் அங்கிங்கெனாதபடி சொல்லி நான் மகிழ்ந்து வருகிறேன்.
பெருமக்களே!
குயிலினுடைய கோலத்தை நாம் ஒவ்வொரு படலமாகப் பார்த்து மகிழ்ந்தோம்.
சென்ற வாரம் குயிலும் காளையும் எப்படியெல்லாம் அவர்கள் காதல் வயப்பட்டனர் என்று சொல்லிக் காட்டி, இந்தக் காளை பெறுகின்ற மகிழ்ச்சியும் இன்பமும் கவிஞராகிய நான் கூடப் பெறவில்லையே என்று பாரதி ஏங்குவதையும் கண்டு நான் விம்மிதமடைகின்றேன்.
பெருமக்களே!
இந்த முறை மிக நுட்பமாக அந்த குயில் பாடல் விளக்கமாக இசையினுடைய மேன்மையும் பாரதியார் சொல்லி வருவதுதான் மிகச் சிறப்பாக இருக்கிறது.
பாரதிக்கு எப்படி எல்லாம் இசை மீது அளவற்ற இன்பமும் நேயமும் பரவிக் கிடப்பதையும் விரவிக்கிடப்பதையும் காணும்போது நாமெல்லாம் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகின்றோம்.
என்னை நேற்றைக்கு என் மகள் ஆதிரை கேட்டாள் –
பாரதியை நாம் சென்னையில் தானே பார்த்துப்பார்த்து மகிழ்ந்தோம். அவருடைய இல்லம் கூட இங்கு சென்னையில் தானே இருக்கிறது. எங்கிருந்து புதுவைக்கு செல்கிறார்? எப்படி அவருக்கு அந்த புதுவையின் வேட்கை? எங்கிருக்கின்றது அந்தக் குயில் பாடுகின்ற காடு? அந்த வனம் எங்கே என்று வினவினார்.
எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. நான் மகள் ஆதிரையிடம் தெரிவித்தேன்.
குயில் பாட்டினுடைய சிறப்பே அவர் புதுவையில் சென்ற பொழுது எப்பொழுது செல்கிறார் என்றால் – இந்தியா வார இதழை நடத்திக் கொண்டிருந்தபோது, இந்த இதழ் சென்னையில் நடத்த முடியாத ஒரு சூழலில் இந்த இதழை நடத்த முடியாது என்பதனால் அரசியல் புகலிடமாக புதுவைக்கு செல்கிறார்.
அதுவரை புதுவை கடன்காரர்களுடைய புகலிடமாகத்தான் பொலிவு பெற்றதாம். புகழ் பெற்றதாம். இதுதான் முதல் முறை அரசியலாளர்களுக்குப் புகலிடமாக பாரதியால் புதுவை புகழ் இடம்பெற்றது.
அங்கு அவர் சென்றவுடன் அவருக்கு அங்குதான் எங்கிருந்தோ வந்தான் என்பது போல குவளைக்கண்ணன் அவருக்கு நண்பனாக அமைவதும், அவர் எங்கு போய் அந்தக் குயில் பாட்டை எந்த இடத்தில் பாடினார் என்பதைக் கேட்டீர்களென்றால் மகிழ்வீர்கள்.
வெள்ளச்சி கிருஷ்ணசாமி செட்டியாருக்கு புதுவையை அடுத்த முத்தியாளப்பேட்டைக்குப் பக்கத்தில் ஒரு அழகான தோப்பு இருந்தது.
அந்த தோப்பில்தான் பாரதியார் மணிக்கணக்காக இருப்பாராம். அந்த தோப்பே தான் பாரதியாருடைய குயில் பாட்டினுடைய காட்சித் தளமாகவும், தமிழ் உள்ளளவும் சாகாவரம் பெற்று விட்டது இந்த தோப்பு என்று நாம் சொல்லலாம்.
குயில் பாட்டு மாஞ்சோலை நிழல் நிறைந்தது.
என்ன வெயில் அடித்தாலும் உரைக்காத அதன் குளிர் தரு நிழலிலிருந்து வெளியே பார்த்தால் கண்ணுக்கு எட்டும் தூரம்வரையில் பசுமையான வயல் தெரியும்.
அந்த வயல் வெளிகள் நடுவிலேதான் அந்த தென்னந்தோப்பு தன்னந்தனியாய் இருக்கும் என்று பாராட்டுகிறார்கள்.
ஒருமுறை வானவில் ரவி என்னிடம் மிக மகிழ்ச்சியாக சொன்னார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு குயில் பாட்டு நடைபெற்ற அந்தத் தென்னந்தோப்பைப் பார்ப்பதற்கென்றே நாங்கள் ஒரு பத்துப் பதினைந்து பேர் சென்று பார்த்து வந்தது நினைவிருக்கிறது என்று சொன்னார்கள்.
ரா.அ.பத்மநாபன் அவர்கள் தன்னுடைய சித்திர பாரதியில் இது பாரதியார் நூற்றாண்டின் போது வெளியிடப்பட்ட இந்த நூலில் மிக அழகாக அந்தக் குயில் தோப்பு பாடப்பட்ட அந்த தோப்பினுடைய படமும் வெளியிடப்பட்டிருக்கிறது.
குயிலும் மாடும்
காலை துயிலெழுந்து சோலை வந்த பாரதியார் குயிலும் மாடும் காதல் களிப்புடன் குலவுவதைக் கண்டு மனம் பதறுகிறார்.
குயில் வழக்கமான தன் காதல் போயின் சாதல் என்ற கானகத்தைப் பாடி மாட்டினை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. குயில் கூறுகிறது –
நான் உலகம் அறியாமல் இருந்தேன்; கானகமும் கண்டதில்லை; உன்னைப் போன்ற எருதையும் நான் ஏறிட்டும் பார்த்ததில்லை. என்னுடைய இசை ஒன்றையே அறிவேன் என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்தது.
பாரதியின் மனம் குயில் கூறியதை மறந்து அதன் குழலிசையில் மயங்கி எண்ணுகிறார்
இறைவனே,
பிரம்மனே,
நான்முகனே

எனத் தொடங்கி உலகு உருவான விதம் பற்றி வானியல் வரலாற்றையே இப்படி பாரதியார் வகுக்கிறார்.
இவ்வுலகு எங்கனம் உருவானது? பாரெங்கும் நீரால் நிரம்பி பின் சூரிய ஒளியில் நீர் குறைந்து நிலம் உருவாகிறது. வான்வெளியில் உன் மூத்த பூமிக்கு காற்றாகிறது. எண்ணுதற்கரிய பல விண்மீன்களையும் கோள்களையும் வட்ட வட்டமாய் உருவாக்கி அனைத்தையும் ஈர்ப்பு விசையால் உருள வைக்கிறாய். அந்த சக்திகளை உருவாக்கிய பிரம்மனே நீ காலத்தையும் ஒரு பரிமாணமாக்கினாய்.
இசை அமைத்த வெளியில் திசையமைத்தாய் புவிக்குள் தோன்றி மறையும் நினைக்க முடியாப் பல படைப்புக்கள் இத்தனை செயல் செய்யும் நீ ஒரு பெரும் அதிசயம்.
உன் படைப்புக்கள் பெரும் அதிசயமாகத்தான் இருக்கிறது.
All forms of nature the flowers so perfectly formed

and coloured the planets and stars the earth,

all gives the idea of beauty, of harmony,

of music, the whole of nature is breathing

not only in living creatures but all nature and the sign of life

that this living beauty gives its music the divine

beauty of music beauty in tonal form line and colour in imagination,

in sentiment, in feeling, in passion for me there is music in every creative feel,

be it architecture, gardening, farming, painting, poetry what not?


In all the occupations of life where beauty as its inspiration,

where the divine has been poured out there is music,

but among all arts of music have been specially considered divine

because it is the exact miniature of the law working through the whole universe.

Music inspires not only the soul of the great musicians but every infant,

the instant that comes into the world begins to move its little arms

and legs with the rhythm of music.


Therefore it is no exaggeration to say that music is a language of beauty,

the language of the one whom every living soul as love and

we can understand that if we realise and recognise

the perfection of all its beauty has god out beloved then it is natural

that this music, which we see in art in the whole universe

should be called in divine art beauty and

sublimity are the two cardinal characteristics of musics.
The sheer beauty of Bharathiyar’s melodious music thinking claims the conflicts of our rational minds.
It reveals, affirms, charms, delights, enlightens, enfanchisises and emancipates.

Sublime is usually used to describe a natural scene

that in its immensity and grandeur seems to dwarf the view

a O rapt in the spell of song I knew not earth.

This is how Bharathiyar explains in this Chapter of Kuyil paattu-

O rapt in the spell of song I knew not earth or sky o

r clustering trees of swelling girth!
I knew not self or bull, ah in my plight,

but the golden gush of song I heard aright.
Four Headed creature, O hear me !they say this ancient world you shaped,

the watery way, this earth and cooled the waters at the mouth of extinct volcanoes,

blew North and South and all about pure ether.

The vault of heaven so beautifully you created.

O vain! to gauge thy mighty power mind reels

to think of worlds of dreamy girth that drown the brink of

heaven roll in myriads ever.

Thou hast,O God,all worlds with fiery movement blest Ah,

time and dreamy distances!

O men! and lives that breathe and die in valley and glen.

in millions thou hast created,

O, God O who can gauge the wonders of thy rod?

Rarest of all thy beauteous creations,

the far expanding blue and swelling oceans, is melody of song.

Though it be thought the elements so beautifully wrought.


A miracle together make they seem but not compared with the cadences

and dream of song. Of the million wonders charming ever.

ஓசையில் தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ.

Oh Song of the million wonders charming ever

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment