ஆசைக்குயிலே… அருட்பொருளே… தெய்வீகமே… என்றெல்லாம் நாம் குயிலைப்பற்றி சென்ற வாரம் வரை சொல்லி மகிழ்ந்தோம். அந்தக்குயில் நம்மையெல்லாம் ஏங்க வைத்து எங்கோ காணாமல் சென்று விட்டதாம். இதுதான் நான் சென்ற வாரம் பேசிய பாடுபொருளாகும். எங்கே போனதாம்? தெரியவில்லை.
எப்படிப் போனதாம்? புரியவில்லை. அந்தக் குட்டிப் பிசாசுக் குயிலைக் காணவில்லையே என்று ஏங்குகின்ற தருணத்தில், அந்தப்பாடலை மிக நுட்பமாக கலைமாமணி சூரிய பிரகாஷ் அவர்கள் அதை எவ்வளவு அழகாகப் பாடிக் காட்ட முடியுமோ பாடி உலகெல்லாம் உள்ள பெருமக்கள் எல்லாம் குயில் பாட்டிற்கு இப்படி ஒரு பரிமாணமா? குயில் பாட்டினுடைய பொருளை இவ்வளவு அழகாகப் பாடிக் காட்டுகிற கலைமாமணி சூரிய பிரகாஷை நாங்கள் என்றென்றும் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொல்லி நெகிழ்ந்தார்கள்.
நண்பர்களே குயில் பாட்டினுடைய அருமையை சூரிய பிரகாஷ் பாடிக்காட்டுவது போல அந்தப் பாடலின் சில உட்பொருள்களையெல்லாம் நான் அவ்வப்போது சொல்ல முனைந்துள்ளேன்.
ஆசைக்குயிலே… அருட்பொருளே… தெய்வீகமே… என்றெல்லாம் நாம் குயிலைப்பற்றி சென்ற வாரம் வரை சொல்லி மகிழ்ந்தோம்.
அந்தக்குயில் நம்மையெல்லாம் ஏங்க வைத்து எங்கோ காணாமல் சென்று விட்டதாம்.
இதுதான் நான் சென்ற வாரம் பேசிய பாடுபொருளாகும்.எங்கே போனதாம்? தெரியவில்லை. எப்படிப் போனதாம்? புரியவில்லை. அந்தக் குட்டிப் பிசாசுக் குயிலைக் காணவில்லையே என்று ஏங்குகின்ற தருணத்தில், அந்தப்பாடலை மிக நுட்பமாக கலைமாமணி சூரிய பிரகாஷ் அவர்கள் அதை எவ்வளவு அழகாகப் பாடிக் காட்ட முடியுமோ பாடி
உலகெல்லாம் உள்ள பெருமக்கள் குயில் பாட்டிற்கு இப்படி ஒரு பரிமாணமா?
குயில் பாட்டினுடைய பொருளை இவ்வளவு அழகாகப் பாடிக் காட்டுகிற
கலைமாமணி சூரிய பிரகாஷை நாங்கள் என்றென்றும் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொல்லி நெகிழ்ந்தார்கள்.
நண்பர்களே
குயில் பாட்டினுடைய அருமையை சூரிய பிரகாஷ் பாடிக்காட்டுவது போல அந்தப் பாடலின் சில உட்பொருள்களையெல்லாம் நான் அவ்வப்போது சொல்ல முனைந்துள்ளேன்
அன்று பரந்து விரிந்த வானத்தின் நடுவில் கோலமிகு கதிரவன் கொலு வீற்றிருந்தான். உடலெல்லாம் சோர்வாக இருக்க, கண்கள் மயங்கிச் சொருக, மனம் துடிதுடிக்க, வெட்கமும் வேதனையும் நெஞ்சை வருத்த, இல்லம் வந்த நான் நினைவிழந்த நிலையில் படுக்கையில் விழுந்தேன். நனவு வருவதற்கு நாள் சென்று மாலை வந்துவிட்டது.
கண்கள் திறந்து பார்த்தபோது நாற்புறமும் நண்பர்கள் சூழ்ந்து நிற்க, சரமாரி கேள்விகள். “விடிந்தும் விடியாத காலையிலே எழுந்து எங்கு சென்றாய்? என்ன செய்தாய்? என்ன நடந்தது? ஏன் வீடு வந்தவுடன் மயங்கி விழுந்து விட்டாய்? உணவும் எடுக்கவில்லை உண்மையில் என்னதான் உனக்கு?” என கேள்விகள் பல அடுக்கடுக்காக வந்தன.
யாருக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் என்னை ஒன்றும் இப்பொழுது கேட்காதீர்கள் நாளை அனைத்தையும் கூறுகிறேன் எனச் சொல்லி நண்பர்களை நயமாக அனுப்பிவைத்தேன் என கவிஞர் கூறுகிறார். கவலையுடன் நொந்து போயிருந்த தாய் சிற்றுண்டியும் பாலும் தர கொஞ்சம் சோர்வு நீங்கியது. அனைத்தையும் மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினேன் என பாரதி இப்பகுதியை முடிக்கிறார்…
And sore exhaustion
rolling in my eyes without
solace with shame and grief fast weakening my limbs
I sought my roof and there O quite unconscious fell by eve I gained my consciousness
my friends reprove and ask and ask,why didst thou fall in swoon
where had thou been and ask and what didst thou my dawn
they say you got out all alone.
reveal why didst thou stray forgetful of thy meal
so they unceasing asked I knew not what to answer best and whom.
In mild retort I spoke I could not now recount my tale come on the morrow,friends and I will tell but now O leave me all alone They left…
Leave a Comment
You must be logged in to post a comment.