சனதான தர்மம் எனும் இந்துமதம் வாழ்வை மிக சுமூகமாக வாழ வழி சொன்ன மதம், மானிட வாழ்வின் சகல உணர்வுகளையும் உறவுகளையும் நெறிபடுத்தி அன்பும் சமாதானமும் செழுமையும் கிடைக்க வழி செய்த மதம்.
கூடிவாழும் மனிதனிடை ஆயிரம் சிக்கலும் பிரச்சினைகளும் எழும், மானிட உணர்வுகளும் இன்னும் பல ஆசைகளும் பல மோதலுக்கும் சண்டைக்கும் வழிவகுக்கும் என்பதால் பல ஏற்பாடுகளை ஞானமாக செய்தது
அதில் ஒன்று ரக்ச பந்தன். உலகின் மிக அதிசயமான தெய்வீக படைப்பு பெண்கள். இறைவன் படைப்பில் மானிட இனம் தொடர்ந்திருக்கவும் நிலைத்திருக்கவும் பெண்ணே மூலம்பெண்கள் வளமாக வீடு வாழும், அந்த வீடு வாழ வாழ நாடு வாழும். பெண்கள் மகிழ்ச்சியாக இல்லா நாடும் வீடும் வாழாது, தர்மத்தின் விதி இதுபெண்கள் மனதால் பலமானவர்கள், எவ்வளவு பெரும் சிக்கலையும் அவர்களால் தீர்க்கமுடியும், எந்த துயரையும் தாண்டி வரமுடியும்
ஆனால் உடலால் பலவீனமானவர்கள். ஆன்மாவால் வலுவானது எல்லாம் உடலால் பலம் குறைந்தது என்பது மானிட விதி, அதை நுணுக்கமாக கவனித்து பெண்களுக்கு ஆண்களே பாதுகாப்பு கொடுத்து சமூகம்
பெண்கள் எனும் அந்த புரிந்துகொள்ள முடியாத பொக்கிஷங்களை மானிட உணர்ச்சியால் மிருகமாகும் பலரிடம் இருந்தும் காக்க அவன் புத்தியினை தெளியவைக்க நுண்ணிய ஏற்பாடுகளை செய்தது இந்துமதம் உலகில் எந்த மதமும் கொடுக்காத அந்த நுணுக்கமான ஞான ஏற்பாட்டை அன்றே செய்தது இந்து மதம்
அதுதான் ரக்ச பந்தன் ரக்ச என்றால் காப்பாற்றுதல் என்று பொருள், ரட்சித்தல் என்பதெல்லாம் இந்த பொருள். பந்தன் என்றால் உறவு, பந்தம் என்ற பொருளில் வரும், மொத்தத்தில் “பாதுகாக்கும் உறவு” எனபொருள்
இது மகாபாரத காலத்திலே தொடங்கிற்று, பகவான் கண்ணனின் கையில் வழிந்த ரத்த காயத்தை தன் சேலையினை கிழித்து பாஞ்சாலி கட்டியதாகவும் , அதனால் மனம் இறங்கிய கண்ணன் அவளை தங்கையாக பாவித்து எக்காலமும் உன்னை காப்பேன் என உறுதி வழங்கியதாகவும் அதுதான் முதல் “ரக்ச பந்தன்” என அழைக்கபடுகின்றது
இந்து சமூகத்தில் கையில் காப்போ, நூலோ கட்டி சில விஷயங்களை உறுதிபடுத்துதல் இந்திய மரபு. விரதம் என்பதை காட்ட காப்பு கட்டுதல், போர் என்றால் கங்கணம் கட்டுதல் என ஏராளமான விஷயங்கள் உண்டு
இன்றும் ஆலயங்களில் கையில் கட்டிவிடும் கயிறு அந்த வகையே, அந்த தெய்வம் நம்மோடு இருக்கின்றது என்ற நம்பிக்கையினை கொடுத்து கொண்டே இருக்கும் என்பது உறுதியான நம்பிக்கை
இது இந்து மரபு, இந்துக்களின் அடையாளம் கையில் கட்டபடும் கயிறு அவனின் சிந்தனைக்கு அவனின் நிலையினை சொல்லி கொண்டே இருக்கும், கோவிலுக்கு கட்டபடும் கயிறு தெய்வம் அவனோடு இருப்பதை சொல்லும், அவன் மனசாட்சிக்கு கட்டுபட வேண்டியதை சொல்லும் கங்கணம் என்பது போர்கால கவனத்தை சொல்லி கொண்டே இருக்கும் பிராமணரின் பூனூல் மட்டுமல்ல சிற்பி ஆசாரியின் மார்பு நூலும் கூட அவனின் நுணுக்கமான கடமையினை நினைவு படுத்திகொண்டே இருக்கும் கையில் பெண்ணால் ஆணுக்கு கட்டபடும் ரக்ச பந்தன் கயிறும் அப்படி அவனுக்கு அவள் உன் சகோதரி, அவளை நீ காக்க வேண்டும் என்பதை சொல்லிகொண்டே இருக்கும்..
தமிழக கோவில் கொடைகளில் காப்பு கயிறு கட்டுவார்கள் , விரதம் அனுசரிக்கின்றோம் எனும் அடையாளம் அது..அவ்வகையில் ஒன்றுதான் புனிதமான இந்த ரக்ச பந்தன் கயிறு..சிலர் சொல்வது போல இது வட இந்திய பண்டிகை என்பதோ, தமிழருக்கு தொடர்பில்லா பண்டிகை என்பது சரியானதல்ல.இது வரலாறு முழுக்க காணபடுகின்றது, ஆப்கானிஸ்தானை கைபற்றிய அலெக்ஸாண்டர் அங்கிருந்த இந்து அரசியினை திருமணம் செய்தான் அவள் பெயர் ரக்சனா.
யாராலும் வெல்லமுடியா அலெக்ஸாண்டரை மிக எளிதாக வென்றான் புருஷோத்தமன், அலெக்ஸாண்டரை அவன் கைது செய்தாலும் உரிய மரியாதையோடுதான் நடத்தினான்எனினும் புருஷோத்தமனால் அலெக்ஸாண்டருக்கு அச்சுறுத்தல் வரலாம் என அஞ்சிய அந்த இந்து பெண் ரக்சனா, புருஷோத்தமனுக்கு ராக்கி அனுப்பினாள்
ஆம், அலெக்ஸாண்டர் உயிர் தப்ப அந்த ராக்கியும் காரணமாயிற்று, அதனாலேதான் போரசுக்கும் அவனுக்கும் ஒரு நட்பும் ஏற்பட்டது பாரத கண்டம் முழுக்க இந்துமதம் இதை சொல்கின்றது, பல இடங்களில் உதவி வேண்டும் ராணியர் பக்கத்து அரசனுக்கு ராக்கி கயிறு அனுப்பிய காட்சிகள் எல்லாம் உண்டு இன்று இந்துக்களின் அந்த ரக்ச பந்தன் விழா. இந்த தர்மத்தை இந்துமதம் ஏன் ஏற்படுத்திற்று? கணனும் பாஞ்சாலியும் தொடங்கி வைத்த விழாவா இது? வலுகட்டாயமாக புகுத்தபட்டதா?
கண்ணனுக்கு பாஞ்சாலி கயிறு கட்டினாளா இல்லையா என்பதல்ல விஷயம், தாயினையும் மனைவியினையும் தவிர மற்ற பெண்கள் உனக்கு சகோதரிகள் என்ற பெரும் தத்துவம் அதில் அடங்கி இருக்கின்றது கயிறு கட்டியதன் மூலம் அண்ணன்கள் மத்தியில் வாழ்கின்றோம் என்ற பெரும் பாதுகாப்பு உணர்வு அக்கால பெண்களுக்கு இருந்திருக்கின்றது
தனக்கு கயிறு கட்டிவிட்டாள், அவள் தங்கை அவளை கண்போல் காக்க வேண்டுமென்ற கடப்பாடு அந்த ஆண்கள் மேல் சுமத்தபடுகின்றது.அந்த ஆணுக்கு அவள் தங்கை ஆகின்றாள், அவளின் அண்ணனாக அவனுக்கு பொறுப்பு கூடுகின்றது, அவளை காக்கும் கடப்பாட்டினை அக்கயிறு நினைவூட்டிகொண்டே இருக்கின்றது
எவ்வளவு அருமையான விழா?, எவ்வளவு அருமையான சமூக ஏற்பாடுகள்.இப்படி ஒரு விழா எந்த வேறு நாட்டிலாவது உண்டா என்றால் நிச்சயம் இல்லை. இந்துக்களின் சிந்தனை அக்காலத்திலே அவ்வளவு உயர்ந்ததாய் பெருந்தன்மைமிக்கதாய் இருந்திருக்கின்றது
அருமை பாரதம் தாய் , மனைவி தவிர எல்லா பெண்களும் உன் சகோதரிகளே என உலகிற்கு சொன்ன ஒப்பற்ற தத்துவத்தின் வடிவம் இவ்விழா இதனை பெருமையொடும் கர்வத்தொடும் கொண்டாடலாம், இந்த கலாச்சாரங்களை எல்லாம் முறையாக பின்பற்றினாலே சமூகம் மிக அமைதியாக இருக்கும்.
இம்மாதிரி பெரும் தத்துவங்களை கொண்ட இந்து தர்மத்தை கொண்ட இந்தியா இன்னும் இந்து நாடு அல்ல என சொல்லிகொண்டிருப்பது மிகபெரும் வரலாற்று மோசடி இந்நாட்டின் உயர்ந்த தத்துவங்களும், மிக உன்னதமான பாரம்பரிய கலாச்சார விழாக்களும் அவற்றின் அர்த்தமும் புரியாத தலைமுறை உருவாகிற்று , இந்து தர்மத்தை விரும்பாத சில சக்திகள் அப்படி இந்துக்களை குழப்பியும் விட்டன.
இவற்றை எல்லாம் மீட்டெடுத்தால் வருங்காலத்தில் மிக அமைதியான, பெண்கள் பாதுகாப்புமிக்க சமூகத்தை உருவாக்க முடியும் இந்துக்களின் பெரும் ஞான தத்துவம் இவ்விழா, சந்தேகமில்லை. இந்தியாவின் மிக பெரும் மாண்பினை உலகிற்கு சொல்லும் விழா.இந்து மத விழாக்கள் என்பது வெறியூட்டுபவை அல்ல, ஆழ சிந்தித்தால் அது சமூகத்தை நல்ல விதமாக பிணைக்கபட்ட சங்கிலிகள், ரக்ச பந்தன் அப்படி ஒரு விழா பகுத்தறிவு என்ற பெயரில் இந்த சங்கிலியினை உடைத்தால் எதற்கும் கட்டுபடாத , அடங்காபிடாரியான தலைமுறையே உருவாகும்
அப்படி ஆகிவிடாமல் நல்ல தலைமுறையினை உருவாக்க பழங்கால நல்ல பாரம்பரியங்களை பின்பற்றுதலோ அவற்றை துணைக்கு அழைத்தலோ தவறே ஆகாது, தாராளமாக பின்பற்றலாம் ரக்ச பந்தன் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,நிச்சயம் மத எல்லையினை தாண்டி எல்லோரும் கொண்டாட வேண்டிய விழா.
இந்து தர்மம் சொன்ன மிக சிறந்த சமூக விழா..எந்த நாட்டிலும் எந்த இனத்திலும் இல்லாத வகையில் இந்து தர்மம் உன் தாயும் மனைவியும் தவிர எல்லா பெண்களும் உனக்கு சகோதரிகளே , அவர்களை காப்பது உன் பொறுப்பு என மிகபெரும் தத்துவத்தை தன் மக்களுக்கு சொல்லிகொடுத்த உன்னத விழா
Leave a Comment
You must be logged in to post a comment.