தேவையான பொருட்கள்
கத்திரிக்காய்- 500g
துவரம் பருப்பு-50g
கடலைப்பருப்பு -50g
நல்லெண்ணெய்-200g
காஞ்ச மிளகாய்-50g
மல்லி -50g
பெருங்காயம் சிறிதளவு
வெந்தயம்-25g
கடுகு சிறிதளவு
புளி – ஒரு லெமன் சைஸ்
தேங்காய் சிறிதளவு
உப்பு-தேவைக்கேற்ப
செய்முறை
இன்னிக்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை பார்க்கலாம்.முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, துவரம் பருப்பு ,காஞ்ச மிளகாய் ,தேங்காய் ,வெந்தயம், மல்லி சேர்த்து வாணலில் வறுக்கவும் பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல பிஞ்சு கத்திரிக்காய் பார்த்து நான்காக கீறிக் கொள்ளவும் பின்பு அந்த மசாலாவை கத்திரிக்காயை உள்ளே வைக்கவும். வாணலில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின்பு கத்தரிக்காயை போட்டு வதக்கவும் நன்கு கொதித்தவுடன் புளிக்கரைசலை,உப்பு சேர்க்கவும். இறக்கும்போது அரிசி மாவில் தண்ணீர் சேர்த்து சிறிதளவு கலந்து குழம்பில் சேர்க்க வேண்டும். ருசியான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்
Leave a Comment
You must be logged in to post a comment.