சிவசிவ !!! #அன்பே #சிவம் !!! #சிவசிவ !!!
சிவபெருமானை மூல முதல்வனாகக் கொண்டு செந்தமிழில் பாடப்பெற்ற பக்திப் பாடல்களின்
தொகுப்பே திருமுறைகள்.
சைவ சமயத்தவர்கள் நாள்தோறும் காதலாகிக் கசிந்துருகி வேதம்போல ஓதத் தக்கவை திருமுறைகள்.
இவை எண்ணிக்கையால் பன்னிரண்டு.
இவற்றைப் பாடியவர்கள் 27 ஆசிரியர்கள்.
முதல் ஏழு திருமுறை:
திருஞான சம்பந்தர்,
திருநாவுக்கரசர்.
சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரப்பாடல்கள்
எட்டாம் திருமுறை:
மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார்
ஒன்பதாம் திருமுறை:
திருமாளிகைத்தேவர், சேந்தனார் முதலிய 9 ஆசிரியர்களால்
இயற்றப்பட்ட திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
பத்தாம் திருமுறை:
திருமூலர் பாடிய திருமந்திரம்
பதினோராம் திருமுறை.
காரைக்கால் அம்மையார், பட்டினத்தார், சேரமான் பெருமாள் நாயனார் முதலிய 11 பேர் பாடிய பாடல்கள் தொகுப்பு
பன்னிரண்டாம் திருமுறை
சேக்கிழார் பாடிய பெரியபுராணம்.
இந்தத் திருமுறைகளிலுள்ள மொத்தப் பாடல்கள் 18402.
திருமுறை ஆசிரியர்கள் இறைவன் திருவருளைப் பெற்றுப் பேரின்பம் அடைந்தார்கள். இவர்கள் தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்னும் பெரு நோக்கத்துடன் மற்றவர்களும் இறைவன் திருவருளைப் பெற வழிகாட்டினார்கள். அவர்கள் காட்டிய வழிமுறைகளே திருமுறைப்பாடல்கள்.
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமன் நமனில்லை” என்று கூறினார் திருமூலர்.
எனவே இறைவன் ஒருவனே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவன் ஓருருவம், ஒரு நாமம் இல்லாதவன். அவன் ஆணல்லன், பெண்ணல்லன், அலியுமல்லன். எனினும் அவனை அம்மையாகவும் அப்பன¡கவும் கருதி வழிபடுதல் நம் சைவ மரபாகும்.
“அம்மை நீ அப்பன் நீ” என்றும் “ஈன்றாளுமாய் எந்தையுமாய்” என்றும் நாவுக்கரசர் பெருமான் தம் தேவாரத்தில் இறைவனை வர்ணிக்கிறார். திருவாசகமும் ” அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” என்று இறைவனை அழைக்கிறது.
இறைவனாகிய சிவபெருமான் அன்பின் மறுவடிவம். “அன்பே சிவம்” “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” என்பன திருமந்திர மொழிகள். இறைவியாகிய உமை அம்மையாரா அருளின் திருவுருவம்.. ” அருளது சக்தியாகும் அரன் தனக்கு” என்பது சிவஞான சித்தியார் வாக்கு. அருள் என்பது அன்புத்தாய் பெற்றெடுத்த குழந்தை என்பதை ” அருளன்னும் அன்பீன் குழவி” என்னும் வள்ளுவர் வாக்கு வலியுறுத்தும்.
அருள் என்பதைக் கருணை என்றும் அழைப்பர். கருணை அறக்கருணை,
மறக்கருணை என இரு வகைப்படும். கருணையின் வடிவம¡கிய அம்மை
அறக் கருணையாகவும் தோன்றுவாள். மறக் கருணையாகவும் காட்சி
அளிப்பாள். ” அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே
துணை” என்னும் குறள் இக்கருத்துக்கு அரண் சர்க்கும்.
அறத்திற்கு ஆதரவு தருவதும் மறத்திற்கு அழிவு தருவதும் சக்தியின் – அம்மையின் இயல்புகளாகும். அதாவது உலகில் நல்லனவற்றை வாழவப்பதும் அல்லனவற்றை வீழவைப்பதும் அவளது செயல்களாகும். நல்லார்க்கு அருள்செய்து காப்பதும். அல்லாரை அடியோடு அழிப்பதும் அவளது பணிகளாகும் இதனை ” துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலன” என்று வடமொழியாளர் கூறுவர்.அறக் கருணை வடிவமே உமை அம்மை, மறக்கருணை வடிவமே உருத்திர காளி. அம்மையின் இவ்விரு
வடிவங்களும் திருமுறைகளில் இடம்பெறும்
உங்களுக்கும் நல்லதாய் , எனக்கும் நல்லதாய்
நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன்
முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடிசாம்பல் என்பதை மறவாதிரு மனமே
Leave a Comment
You must be logged in to post a comment.